Wednesday, August 10, 2016

ஐதரேயம்



சொல்லில் எழுந்தது நெருப்பு. பிரம்மனின் மூக்கில் தோன்றியது உயிர். உயிர்ப்பே காற்று. விழிகளிலிருந்து நோக்கு. நோக்கிலிருந்து ஒளி. ஒளியிலிருந்து சூரியர்கள். செவிகள் தன்னுணர்வை படைத்தன. தன்னிருப்பைக்கொண்டு நான்கு திசைகள் வகுக்கப்பட்டன. தன்னுள் கனிந்தபோது உள்ளம் பிறந்தது.

ஐதரேய உபநிஷதத்தில் இருந்து எடுத்தாளப்பட்ட இந்த வரிகள் இந்த அத்தியாயத்தில் முன்னும்பின்னும் நுணுக்கமான வாதங்களுடன் மிக இயல்பாக ஒரே மொசைக் ஆக பின்னப்பட்டுள்ளன.

ஒரு வேதமெய்ஞான சாலையில் உட்காந்து என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றுபார்ப்பதைப்போலவே இருந்தது. அதிலும் கடைசியில் அந்த இரு மாணவர்களும் ஐதரேய உபநிஷதத்தின் முக்கியமான கருத்தாகிய விக்ருதி அபானம் இரண்டையும் வைத்து [உச்சந்தலை, குதம்] பகடிபேசுவதைக் கண்டபோது ஒரு நிறைவு வந்தது

சுவாமி