அன்புள்ள ஜெ
இதுவரை வந்த வேதபாடசாலைகள் பற்றிய செய்திகளிலேயே நுட்பமாக ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்று வேதம் ஓதியவர்கள் பூசாரிகள் அல்ல. அவர்கள் காடுகளில் வாழ்ந்து,விவசாயம் செய்த முனிவர்கள். அவர்கள் துறவிகளும் அல்ல.
அதேபோல இன்றையகதையில் குயவச்சாதியைச்சேர்ந்தவர் வேதஞானியாக ஆனதாகவும் வருகிறது. இதர என்னும் வார்த்தையே ஐதரேயம் ஆனது என எழுதியிருக்கிறீர்கள். இந்தக்கதைவேறெங்காவது இருக்கிறதா இல்லை உங்கள் கற்பனையா என்று தேடினேன். இதை சாயனர் அவர் எழுதிய வேதவிளக்கத்திலே சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது
சாமிநாதன்