Thursday, October 12, 2017

நீலனின் முதன்மை மாணவன்



இனிய ஜெயம் ,

இன்று  அப்சிம்ம்ன்யூவின் கொய்ய எழுந்த  பாணனின் கையை  படையாழி கொண்டு துணிக்கும் நீலனின் முன் திகைத்து ஸ்தம்பித்து நின்றுவிட்டது என் அகம்.    அபிமன்யு சார்ந்த அனைத்தும் ஒரு வரிசையில் வந்து நின்றுவிட்டது.  

ஆம் அர்ஜுனன் அல்ல ,அபிமன்யுதான் நீலனின் முதல் மாணவன் . நிகரற்ற முதன்மை மாணவனும் கூட.  கருவில் பயின்றவன் அபிமன்யு என்னும் ஒரே கருதுகோளில் மூளை சிக்கி கல்லாகி நின்றிருந்தேன்.  வெண்முரசு அதை உருக்கி ஓட வைத்து விட்டது.  அபிமன்யுக்கு ஆசிரியன் யார் ? நீலன் அல்லவா?  அவன் எதை அபிமன்யுவுக்கு போதித்திருப்பானோ  அதை அபிமன்யு கொஞ்சம் கொஞ்சமாக உணர்வதே இந்த முகில்திரை அத்யாயம். 

சிறு வயதில்  மலரில் சிக்கிய வண்டு கண்டு பீதியில் அழும் அபிமன்யுதான் இளமையில் , மீள இயலா இடமா எனில் அதுதான் என் இடம் என உள்ளே நுழைகிறான்.   அவையில் பாணர் முன்பு அவன் நீலன் குறித்து பேசும்போதே தான் நீலனின் கை ஆயுதம் என முற்றிலும் அறிகிறான்.  கிரேக்க செவ்வியல் தத்துவவாதிகள் முதல் ,     குரு வியாச பிரசாத் வரை சொன்ன ஒன்று ,  நமது அறிதல் என்பது  மீண்டும் கண்டடைதல் என்பதே அன்றி வேறில்லை.  இதைத்தான் அபிமன்யு சொல்கிறான்.    அவனுக்கு போதிக்கப்பட்டது அனைத்தும்  கொஞ்சம் கொஞ்சமாக அவனது அறிதலுக்குள் வருகிறது. அந்த அறிதலில் நின்றே  பாணர் வசம் ''இளைய யாதவர்  இன்னும் சொல் வடிவாக மாறாத வேதம் ஒன்றின் முதல்வர் '' என்கிறான்.  ஆம்  அந்த வேதம் அர்ஜுனன் முகாந்திரமாகக் கொண்டு சொல்லப்பட்டது , ஆனால்  அந்த வேதம் அபிமன்யுவுக்கு  நீலனால் கருவிலேயே உணர்தலாக அவனுக்குள் போதிக்கப்பட்டு விட்டத்து.  அபிமன்யு  அவனது தன்னறத்தில் நின்றே சொல்கிறான் ,    ''எனது களங்கள் முன்பே ஒருக்கம் செய்யப்பட்டு விட்டது , அவர் பொருட்டே நான் களம்படுவேன்'' 

நூறு முறை இந்த சொல்லின் கீழ் அடிக்கோடிடுவேன். நீலன் அவனது மைந்தனுக்காகவோ ,  பெயர் மைந்தனுக்காகவோ , எழவில்லை , தனது முதன்மை மாணவனுக்காக மட்டுமே எழுந்து வந்திருக்கிறான். இங்கே  அபிமன்யு உயிர் பிரியும் எனில்  நீலன் வருகை, அனைத்தையும் இழந்து அவன் நிறுவப்போகும் வேதம் எல்லாம்  முற்றிலும் பொய்.

மொத்த பாரதக் களம்  முழுமைக்கும்  நீலன்  எவருக்கும் கடன்பட்டவன் அல்ல . அபிமன்யு ஒருவனுக்கு அன்றி
கடலூர் சீனு