அன்புள்ள எழுத்தாளருக்கு...
எழுதழல் - 45.
தன் முடிவில் ஐயம் கொண்டிருப்பவர்கள், தாம் எண்ணியது நடக்காமல் போய் விடுமோ என்ற பதற்றம் கொண்டவர்கள், அவையில் தன் குரல் முந்தி நிற்க விழைவோர் உரக்கப் பேசுகிறார்கள். பிறரைப் பேசவும் விடாமல் தன்னையே முன் வைத்துக் கொண்டிருப்பார்கள்.
மாறாக, என்ன நடக்கும் என்று உறுதியாகத் தெரிந்தவர்கள் அல்லது தான் எண்ணுவதே இறுதியில் நிகழ்ப் போகின்றது என்று திண்மை கொண்டிருப்போர் உரக்கப் பேசுவதில்லை. தேவையான போது மட்டும் வந்து சொல்வன சொல்லி விட்டு அமைதியுறுவர்.
சத்யபாமை ஐயம் கொண்டிருக்கிறாள்; பதற்றப்படுகிறாள்; தன் குலமே தன்னை விலக்கிக் கொண்டு சென்று கொண்டிருப்பதைக் காண்கிறாள். தன் மைந்தனின் நாளையை எண்ணிக் கவலையுறுகிறாள். எனவே அபுமன்யூவிடம் தன் எண்ணங்களைச் சொல்லி ருக்மிணிக்கு வாய்ப்பு தருவது போல் காட்ட விரும்புகிறாள்.
ஆனால், ருக்மிணி உறுதியாக தான் எண்ணுவதே நிகழும் என்ற மெய்ப்பாட்டில் இருப்பதால், அபிமன்யூ மொத்தமாக அத்தனையையும் சொல்லி விட்ட பின்பும் கண்டு கொள்ளாமல் எளிதாக எடுத்துக் கொள்கிறாள்.
மற்ற அறுவர் இந்த இருவரின் நிலைப்பாடுகளுக்கும் இடையில் இருந்து கொண்டிருப்பர்.
சியமந்தக மணிக்காக திருஷ்டத்யும்னன் எண்மரிடம் விளையாடியதைப் போல் இன்று அபிமன்யூ வினையாடுகிறான்.
அன்று மணி, இன்று மண்.
நன்றிகள்,
இரா. வசந்த குமார்.