அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
உள்ளத்தின் விம்மலை பெருமான் அறிந்தனன்
உள்நின்று உழற்றும் இவ்வுயிரின் தவிப்பு கருதினன்
தாழ்ந்தென் கண்கள் கருதும் திருவடி
தந்தோம் என்றவன் தந்தனன் இக்கணம்
"உயிரே இக்கணம் போன்றதொன்று இனியில்லை உனக்கு
செய்திரா தவம் தரும் பெரும்கருணை வரம் இது"
உருகும் கண்களின் பெருகும் நீர் கொண்டு
கழுவியவாறு மேலும் கருதுவேன்
"அண்ணலே கரம் இட்டனையே எளியேன் சிரம் மீது நின் பதமும் இடுக."
இன்றுநான் பிரலம்பன் ஆனேன்
அத்தியாயம் பாதியில் நிற்கிறது.
இதனில் உருகார் எதனிலும் உருகார்.
இன்று இதன்மேல் தொடர வல்லேன் அல்லேன்..
இன்றுபோய் நாளை வருகிறேன் காத்திரு வெண்முரசே !
அன்புடன்
விக்ரம்
கோவை