இந்திரனின் மைந்தன் ஒரு முக்கியமான வெற்றியை நோக்கிச் செல்கிறான். கண்ணன் அவனுடன்
இருக்கப்போகிறான் என்னும் செய்தி. ஆகவே அவனுக்கு தந்தையின் வாழ்த்து இடிமின்னலாக வந்து
நின்றிருக்கிறது. அந்தக்காட்சியின் நுட்பமான வர்ணனைகள் வழியாக அதை கண்கூடாகவே பார்க்கமுடிந்தது.
யமுனை நிரோட்டம் சூடாவது. குளிர்காற்று. பின்னர் மழையில் தெரியும் காட்சிகள். மழையை
மீன்களும் பறவைகளும் கொண்டாடுவது. எல்லாமே நுட்பமான விவரணைகள். நிர்மித்ரனின் இந்திரத்துதியும்
இயல்பாகவந்து சேர்ந்தது. அங்கே இந்திரனைத் துதிப்பது ஆசிரியர்தான் என்ற எண்ணம் ஏற்பட்டது