நாம் பிளவுற்று மடிவது ஊழ் எனில் அவனும் அதை தடுக்கமுடியாது. என் மைந்தன் அப்பழி கொள்ளவேண்டாம் என்று மட்டுமே சொல்லவந்தேன் – என்று தேவகி சொல்லும் இடத்தை வாசித்தபோது என்ன ஒரு
தெளிவு என்னும் எண்ணம் வந்தது. அன்னையருக்குரிய தெளிவு அது. கிருஷ்ணன் மகாபாரத யுத்ததில்
ஆயுதமெடுத்திருந்தால் என்ன ஆகும் என்று எண்ணும்போதுதான் அவள் சொன்னதன் அர்த்தமே புரிகிறது
சித்ரா