Monday, January 1, 2018

பீஷ்மரின் நிலை



ஜெ

பாரதப்போரில் பீஷ்மர் எடுத்த நிலைபாடு என்ன என்பதைப்பற்றி புராணங்களில் திரும்பத்திரும்ப பலவேறு காரணங்களைச் சொல்வதுண்டு. அது கிருஷ்ணனின் மாயை என்றுதான் பாட்டிகள் சொல்வார்கள். மகனுக்காக நின்றார் என்றாலும்கூட அது சரியாக வருவதில்லை. தவறின்பக்கம் நிற்கும் முதியவர் என்ற சித்திரம் அவரைப்பற்றி மனதில் பதிந்துவிட்டது

அதை மீறிச்செல்கிறது இந்நாவலில் நீங்கள் வைக்கும் சித்திரம். பெரிய ஒரு கொள்கைவிளக்கமாக அது வரும் என நினைத்திருந்தேன். ஆனால் அது முதுமையின் தளர்வு என்று சொல்லும்போது எளிதாக இருந்தாலும் உண்மை என்றே தெரிகிறது. கண் தொலைவுக்கு தெரியாமலாகும்போது தெரிந்த இடத்தை வைத்து வாழ்க்கையை முடிவுசெய்து வாழ்வதுபோல அவருடைய மனமும் புத்தியும் எந்த அளவுப்புரிந்துகொள்கிறதோ அந்த அளவுக்குள் எளிமையாக அனைத்தையும் புரிந்துகொள்கிறார். அது தான் பெரும்பாலும் முதியவர்கள் செய்வத் என நினைக்கிறேன்


அருண்