ஜெ
நீண்ட இடைவேளைக்குப்பின்
விப்ரரை நினைவுகூர்ந்தபோது ஒரு பெரிய நெகிழ்ச்சி ஏற்பட்டது. விப்ரரின் மரணம் திருதாவின்
வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை. அவர் அவருடைய மனசாட்சியாக இருந்தார். அவருடைய
இறப்புக்குப்பின்னர் அந்த மனசாட்சியின் பிடியிலிருந்து ஒரு தற்காலிக விடுதலையை அடைந்தார்.
ஆனால் அவரால் நிரந்தரமாக அதிலிருந்து விடுபடமுடியாது. மீண்டும் அதே விப்ரர் இன்னொருவடிவில்
வந்து நின்றிருக்கிறார். அவன் திருதாவை அடித்துச் சுருட்டிக்கொண்டு அமரச்செய்வது மிகமுக்கியமான
ஒரு குறியீடு என நினைக்கிறேன்
எஸ்