ஜெ
வெண்முரசின் இன்றைய
அத்தியாயத்தை ஒரு தனி தத்துவநூலாகவே வாசிக்கவேண்டும். நண்பர்களுடன் இதைப்பற்றி நீண்டநேரம்
ஃபோனில் உரையாடி ஒரு தெளிவை அடைந்தேன். பீஷ்மரின் கேள்வி என்ன? எனக்கு ஒன்றும்தேவையில்லை.
நான் ஏன் செயலாற்றவேண்டும்? நான் வெறுமே இருந்தால் என்ன? அதற்குத்தான் சுலபைக்கும்
ஜனகருக்குமான உறவை சுட்டிககாட்டுகிறார். பீஷ்மரால் தத்துவார்த்தமாகக் கேட்கமுடிவதில்லை.
அவர் நேரடியாகக் கேட்கிறார். அதைத்தான் சுலபை விரிவான தத்துவமாகக் கேட்கிறாள்.
அதாவது அறிவை மட்டுமே
நம்மால் அறியமுடியும். ஏனென்றால் நாம் அறியும்விதத்துக்கு கட்டுப்பட்டது அறிவு. ஆகவே
அறிதல்முறைகளே அறிவைத் தீர்மானிக்கின்றன. அப்படி
இருக்க செயலாற்றுவதனால் என்ன பயன்? செயல்கள் ஒன்றிலிருந்து ஒன்றெனபிரிந்து வளரும்.
அவற்றில் நாம் அறிவது நம்மைத்தான். ஆகவே செயல்மூலம் அடைவது ஒன்றுமே இல்லை – இதுதான்
சுலபை சொல்வது
அதற்கு ஜனகர் விரிவாக
மறுத்து பதில்சொல்கிறார். ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.
Perfect sincrinization பற்றிச் சொல்கிறார். இதில் பல படிகள். பல கேள்விகளுக்கு
விடை ஒட்டுமொத்தமாகத் தரப்படுகிறது.
கீதையின் கர்மயோகத்தில் அர்ஜுனன் கேட்கும் கேள்விதான். அந்தக்கேள்வியை
பெரிதாக்கி பதிலை விளக்கமாக்கியிருக்கிறது இந்த அத்தியாயம்
சாரங்கன்