ஜெ
இன்றைய அத்தியாயத்தை [ வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11
] வாசித்தபோது எங்கெங்கோ சுழன்று சுழன்றுவந்ததுபோலிருந்தது. செறிவான அத்தியாயம். ஒரு அத்தியாயத்தில் என்னென்ன வருகிறது. உசகன் என்னும் பாம்புக்கும் சந்தனுவுக்குமான கதை. சந்தனு சத்யவதியை அணுகியதைத்தான் உசகன் தீயை மலரென்று நினைத்த கதை சொல்கிறது. சந்தனுவின் குறைவுகளை நிரப்பும் ஆளுமை என்று பீஷ்மரை காட்டுகிறது. பீஷ்மரின் கர்மவலை எவ்வளவு பெரியது என்பதைக் காட்டுகிறது. பிறப்புக்கு முன்னும்பின்னும் எவ்வளவு கண்ணிகள். எத்தனை சிக்கல்கள். அதோடு அவருக்கும் அம்பைக்குமான ஜன்மஜன்மாந்தர உறவு. அவள் கையிலிருக்கும் குழந்தை. கனவுகளின் மயக்கமான சிக்கல்கொண்ட அத்தியாயம். ஆனால் நினைக்கநினைக்க விரிவடைவது
சாரங்கன்