Thursday, April 5, 2018

பீஷ்மரின் மனத்தடுமாற்றம்




அன்புள்ள ஜெ

பீஷ்மரின் மனத்தடுமாற்றம் வாசித்தேன். கீதை அர்ஜுனனின் மனத்தடுமாற்றத்துக்குச் சொல்லப்பட்டது. அதை மகத்தான மனத்தடுமாற்றம் என்று சொல்கிறீர்கள். இந்நாவலில் பலருடைய பலவகையான மனத்தடுமாற்றமாக அதை மாற்றிக்கொள்கிறீர்கள் என நினைக்கிறேன். பற்றின்றி கர்மம்செய், உனக்கு எல்லாம் கிடைக்கும் என கர்ணனிடம் கிருஷ்ணன் சொல்கிறார். எனக்குப் பற்றே இல்லை. எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் ஏன் கர்மம் செய்யவேண்டும் என்று பீஷ்மர் கேட்கிறார். என்னபதில் வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்

ஸ்ரீனிவாசன்