Saturday, October 6, 2018

முன்னுதாரணம்



அன்புள்ள ஜெ

நான் இப்போது எழுத போவது குறித்து உங்களிடம் கேட்க வேட்க வேண்டும் என்று அதிக நாட்களாக எண்ணியிருந்தேன்.

பழியின் தனிமை அந்த சந்தர்ப்பத்தை கொடுத்தது.

சீதை, த்ரெளபதி.

மிக வலிமையான பெண்கள் நமக்கு. பாடம் புகட்ட என்று எடுத்துக் கொள்வோம்.

இருவருமே கணவரால், கணவர்களால் ஒரு வகையில் சிறுமை படுத்தப் படுகிறார்கள். அவர்கள் மேல் எந்த தவறும் இல்லாவிட்டாலும் சந்தர்ப்ப சூஷ்நிலையால் மிகவும் மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்கப் படுகிறார்கள். நான் ஒரு பெண்ணின் கண்ணோட்டதில் இதைப் பார்க்கிறேன்.

சீதா மாதா தன் பொறுமையினால் தனக்கேற்பட்ட வலிமையை சுமந்து தன்னால் மற்ற எவர்க்கும் பாதிப்பு ஏற்படாமல் தன் மக்களை நல்ல வழியில் வளர்த்து ( வான்மீகி மஹரிஷியின் உதவியுடன்) தன் கணவினிடம் ஒப்படைத்து விட்டு தன் தாயாருடன் சென்று விடுகிறார். தன் கோபத்தை தன் கணவரிடம் மீண்டும் இணையாமல் காட்டுவதாக நான் எடுத்துக் கொள்கிறேன். அவரால் மற்ற யாரும் துன்புறவில்லை.

ஆனால் த்ரெளபதி தன் கோபத்தினால் பல பேரை அழிக்கிறார்.  தான் பெற்ற மக்களும் மடிகின்றனர். இந்த கோபம் பலரை, இந்த பழிக்கு சம்பந்தம் இல்லாதவர்களும் அழிந்து போகின்றனர். த்ரெளபதிக்கும் பழி தீர்த்தாலும் நிம்மதி கிடைத்திருக்குமா என்று எனக்கு புரியவில்லை.

இவர்கள் போல் பல பெண்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பார்க்க வேண்டியது சீதா மாதாவை என்பது என் எண்ணம்.

உங்கள் கருத்து என்ன?

அன்புடன்
மாலா

அன்புள்ள மாலா

நம் மரபில் நெடுங்காலமாகவே திரௌபதி ஓரு முன்னுதாரணமாகச் சொல்லப்படுவதில்லை. மாறாக அழிவை உருவாக்கும் எதிர்மறைக் கதாபாத்திரமாக, பலி அளித்து நிறைவுசெய்யப்படவேண்டிய தெய்வமாகவே சொல்லப்படுகிறாள். திரௌபதி, பாஞ்சாலி போன்ற பெயர்கள் மிக அபூர்வமாகவே சூட்டப்படுகின்றன. முன்னுதாரண தெய்வம் சீதைதான்

ஜெ