அன்புள்ள ஜெ
அபிமன்யூவின் கதாபாத்திரம் ஆரம்பம் முதலே ஒரு நிலையான தன்மையையும் கூடவே ஒரு
வளர்ச்சியையும் கொண்டிருக்கிறது. அவன் முதிர்ச்சியில்லாதவனாகவும் கொந்தளிப்பானவனாகவும்
தற்பெருமை கொண்டவனாகவும்தான் இருக்கிறான். அச்சமே இல்லாமலும் இருக்கிறான். ஆகவே அவன்
மிகப்பெரிய வில்லாளி. ஆகவே பீஷ்மரையே எதிர்த்து நின்று தோற்கடிக்கிறான். ஆனால் ஆரம்பத்தில்
நிலைகொள்ளாத விளையாட்டுப்பிள்ளை மாதிரித் தெரிகிறான். இப்போது கொஞ்சம் கசப்பும் வன்மமும்
கலந்தவனாகவும் சாக விரும்புபவனாகவும் மாறிவிடுகிறான். உத்தரையுடன் அவன் உறவு உருவான
பிறகுதான் அபபடி ஆகிவிட்டான் என்று என் வாசிப்பில் தோன்றியது
ஆர்.சந்திரசேகர்