இப்புவியில் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடத்தக்கவை என்பதிலேயே உண்மை ஒன்று ஒளிந்துள்ளது. ஓர் உளநிகழ்வையோ புவிநிகழ்வையோ பொருட்களால் ஒப்புமைப்படுத்திவிட முடியுமென்பதுதான் மானுட அறிதலுக்கு இறை அளித்துள்ள ஒரே வாய்ப்பு
ஓர் உரையில் நம்மால் பார்க்கவும் கேட்கவும் சுவைக்கவும் உணரவும் முகரவும் முடிகிறது என்பதுதான் எவ்வளவுபெரிய வாய்ப்பு, அதைப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என நிஸர்க்கதத்தர் சொல்கிறார். நம் மரபில் பிரத்யக்ஷத்திற்கு ஸமானமாகிய ப்ரமாணமாக உபமானமும் சொல்லப்படுகிறது. அதன் பொருளை இந்தவரிகள் அற்புதமாகச் சொல்கின்றன
ஆதிவாசிகள் எதையும் உவமையாகவே சொல்வார்கள். உவமையிலிருந்துதான் மொழியே உருவாகி வந்திருக்கிறது. சிந்தனை என்பதே உவமைதான். அணு என்பதும் குவாண்டம் என்பதும் ப்ளாக்ஹோல் என்பதும்கூட உவமைகள்தான்
சுவாமி