Friday, August 7, 2020

சென்றுகொண்டிருப்பவன்


சென்றுகொண்டிருப்பவன்! அச்சொல் ஆதனுக்கு ஒரு சிறு திடுக்கிடலை உருவாக்கியது. சென்று கொண்டிருப்பவன் எனும் சொல்லைப்போல தன்னைப்பற்றி சொல்ல பிறிதொரு சொல்லில்லை என்பதை அவன் உணர்ந்தான்.

ஜெ களிற்றியானைநிரை நாவலில் வரும் இந்த வரி எனக்கு மிக முக்கியமானது. நான் எழுதி ஒட்டிவைத்திருக்கும் வரி இது. இந்த வரியை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். சென்றதலைமுறையினர் நமக்கு கற்பிக்கும் வாழ்க்கை என்பது எங்காவது அமர்ந்துவிடுவதைப் பற்றித்தான். அந்தவாழ்க்கை இன்றைக்கு எனக்கெல்லாம் அர்த்தமே இல்லாத ஒன்றாகப் படுகிறது. நான் விரும்புவது சென்றுகொண்டே இருக்கும் வாழ்க்கை. ஆறாக இருக்க விரும்புகிறெனெ. குளமாக அல்ல

வெண்முரசில் அவ்வாறு அலைந்துகொண்டே இருக்கும் கதாபாத்திரங்கள் பலர் வருகிறார்கள். உதிரிக்கதாபாத்திரங்களான இளநாகன் ஆதன் போன்றவர்கள் மட்டுமல்ல பீஷ்மர் அர்ஜுனன் போன்றவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து நிறைவுசெய்தவர்கள் என்று படுகிறது

ஜான் கென்னடி