Monday, August 10, 2020

துருவனின் கதை


அன்புள்ள ஜெ

வெண்முரசில் துருவனின் கதைக்கும் கங்கைக்கும் இடையே உள்ள உறவை மட்டும் ஒரு தனிநூலாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன். கிண்டிலில் இலவசநூலாகக்கூட வெளியிடலாம். அது ஒரு தனிநாவல். ஒரு குட்டிக்காவியம். இந்திய மரபில் உள்ள குறியீடுகள்தான், ஆனால் புத்தம்புதிய கதை அது. கங்கை நிலையற்றவள். துருவன் நிலைபேறு கொண்டவன். நிலையற்ற கங்கையில் அவன் தன் நிலைப்பேறை பார்த்துக்கொண்டிருக்கிறான்

ஒட்டுமொத்தப்பார்வையில் அது திரௌபதியின் ஒருமையையும் அலைபாய்தலையும் சொல்கிறது. ஆனால் வெண்முரசின் மொத்தத்திலிருந்து வெளியே எடுத்தோமென்றால் முற்றிலும் வேறொரு அர்த்தம் அளிப்பதாகவும் இன்னும் பெரியதாகவும் உள்ளது

அருண்