[இடும்பி கோயில் மணாலி]
அன்புள்ள ஜெயமோகன் சார்,வணக்கம்!
காட்டு வாழ்க்கையில் தன் பிள்ளைகள் மீதான குந்தியின் அன்னியோன்னியம்நெகிழ்வைத்தருகிறது.அரக்கர் குலப் பெண்கள் என்றால் எனக்கிருந்த கற்பனையை இடும்பியின் மூலம் உடைத்திருக்கிறீர்கள்.அதென்னவோ,உங்கள் எழுத்தில் வரும் அத்தனை பெண்களும் மோகம் கொள்ள வைக்கிறார்கள்.
பீமனிடம் பாசம்,அர்சுனனிடம் பயம்,தருமனிடம் எகத்தாளம்.....!
தருமனை சூர்ணன் நக்கலடிப்பதில் வெளிப்படுகிறது.
அன்புள்ள ராஜேந்திரன்
இடும்பியும் கடோத்கஜனும் மூலமகாபாரதத்திலேயே பண்பும் அன்பும் நிறைந்தவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். அவளுடைய நற்பண்புகளால் கவரப்பட்டே குந்தி அவளை தன் மகன் மணக்க ஒத்துக்கொள்கிறாள். அவளை வட இந்தியாவில் தெய்வமாக வழிபடுகிறார்கள். தென்னிந்தியாவின் புராணக் கதைசொல்லலில் இடும்பி ‘அரக்கி’ ஆகிவிடுவாள்
ஜெ