அன்புள்ள ஜெமோ
நீலம் நாவலில் வாசித்தபோது பூதனையை நீங்கள் சுதந்திரம் எடுத்துக்கொண்டு அன்னையாக காட்டியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் சுட்டி கொடுத்த கட்டுரையில் அந்தச் சிலையை பார்த்தபோது மரபான பார்வையிலும் கருணை கொண்ட அன்னையாகவே அவள் இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. நாம் எளிமையான குழந்தைக்கதைகளுடன் புராணங்களை அறிவதை நிறுத்திவிடுவது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிந்தது. அதைவைத்துக்கொண்டு புராணங்களின் அழகையும் ஞானத்தையும் மதிப்பிடவே முடியாது
சுந்தர்
அன்புள்ள சுந்தர்,
பூதனை என்ற பெயரே மண்ணைச் சுட்டுவது. அன்னத்தை சுட்டுவது. அந்த பொருளில் அந்த அத்தியாயத்தை வாசியுங்கள்
ஜெ