Tuesday, March 31, 2015

கிருஷ்ணனின் விரிவு




அன்புள்ள ஜெ

கிருஷ்ணனை ஒரு சாமானியனாகவும் அதைக்கடந்தவனாகவும் உருவாக்கிக்கொண்டுவரும் நுட்பமனா புனைவை கவனித்துக்கொண்டே வருகிறேன். சாதாரணமாக என்ன செய்கிறார்கள் என்றால் இத்தகைய நுணுக்கமான வரலாற்று பிம்பங்களை அல்லது பௌராணிக கதாபாத்திரங்களையெல்லாம் ஒருவகையில் யதார்த்தமாக ஆக்கி சாதாரணமாக ஆக்கிவிடுகிறார்கள். அதுதான் நவீன இலக்கியம் செய்வது என்று காட்டுகிறார்கள்.

அப்படிசாதாரணமாக ஆக்குவது வழியாக என்ன அடையப்படுகிறதென்று பார்த்தால் அந்த அசலில் இருக்கும் வசிகரம் இல்லாமலாகிவிடுகிறது. அதுவும் நம்மைப்போலத்தான் என்ற எண்ணம் வந்ததுமே அந்தக்கதாபாத்திரம் செத்துவிடுகிறது. A blow on faith என்று மட்டும்தான் அதைச் சொல்லமுடியும். அதில் என்ன கலை இருக்கிறதென்று எனக்குப்புரிந்ததே இல்லை. நீங்கள் கிருஷ்ணனை அந்த மாயப்பூச்சுகளுடனேயே உள்ளே சென்று அதன் texture ல் உள்ள சிக்கல்களை ஆராய்கிறீர்கள். அவனுடைய முழுமையை இப்படித்தான் சொல்லமுடியும் என்று நினைக்கிறேன்

பாஸ்கரன்

அன்புள்ள கிருஷ்ணன்

கிருஷ்ணன் இந்திய பௌராணிக மரபு உருவாக்கி எடுத்த பெரும் மர்ம உருவகம். அந்த enigma வை எப்படி விளங்கிக்கொள்வது என்பதே சவால். அந்த மர்மத்தை அப்படியே தவிர்த்துவிட்டு அவனை சாமானியனாக ஆக்கிக்கொள்வதில் என்ன இருக்கிறது?

அந்த மர்மம் பல்வேறு குணச்சித்திரங்கள் நீண்ட வரலாற்றுப்போக்கில் தொடர்ந்து கலக்கப்பட்டதனால் உருவானது என்பார்கள். அந்தக் கலவை மிகப்பிரம்மாண்டமானது. நான் அதை ஆரம்பத்திலிருந்தே செய்யமுடியுமா என பார்க்கிறேன்

ஜெ

பலராமர்




திரு ஜெயமோகன் அவர்களுக்கு, 
ங்கள் திவுகள்,சிறுகதைகளை மீபத்தில் டித்து ருகிறேன்.
பாரத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு.வெண் முரசு அத்தியாயங்களை (தொடர்ச்சியாகஇல்லாவிடினும்)தேர்வு செய்து டித்து ருகிறேன். 
கிருஷ்ணன், குனி இடையேயானடை ஆட்டஅத்தியாயம் அற்புதம். 
நான் கவனித்தற்றொரு விஷம் பாத்திரஉருவங்கள். 
ஊடங்களின் பொதுவானஇயல்பு நேர்மறை மற்றும் எதிர்மறை (என அவர்கள் உருவகம் செய்த)கதாபாத்திரங்களை நேர்மறை அல்லது எதிர்மறையின் உச்சத்தில் வைத்து சித்தரிப்பது. இதனை உடைக்கமுயன்றர்களும் உண்டு.(.ம். ஆர்.எஸ்.னோகர் நாடங்கள்). அதிலும் அவர்கள் தாபாத்திரத்தின் ழக்கமானஉருவத்தின் நேர் எதிர் முனையில் அவர்களை நிறுத்துவது ழக்கம்.(இது தை சொல்லிகளின் பொதுவானஇயல்போ?)  
வெண் முரசில் பல கதாபாத்திரங்கள், முக்கியமாக லராமர் பாத்திரஉருவம் மேற் சொன்னஇயல்பை அடித்து நொறுக்கி விட்டதுஇது போன்றபாத்திரங்கள் பிற படைப்புகளில் (பெரும்பாலும்) நாசூக்கானஉருவத்திலேயே சொல்லப்பட்டுள்ள‌. 
நேர்மறையோ,எதிர்மறையோ உடல் மொழி,செயல்கள் வெண் முரசின் எல்லா  தாபத்திரங்களிலும் இயல்பானவையாகஇருக்கிறது. 
ஹாபாரத்தின் மூலத்திலும் இப்படித்தானா. அல்லது இவை பெரும்பாலும் உங்கள் ற்பனையில் டித்தஉருவங்களா? 
அன்புடன்
எஸ்.மேஷ் கிருஷ்ணன்

அன்புள்ள ரமேஷ் கிருஷ்ணன்,
பலராமன் மகாபாரதத்தில் ஒரு மெல்லிய சித்திரம் மட்டுமே. உண்மையில் ஒரு கதாபாத்திரத்திற்குரிய எந்த அம்சமும் அதில் அவருகில்லை. அவர் பத்து அவதாரங்களில் ஒருவர். ஆனால் அவதார நொக்கம் என ஏதுமில்லை. துரியோதனனுக்கு ஆசிரியராக இருந்தார் என்பதற்குமெல் ஒன்றுமே செய்யவுமில்லை

கிருஷ்ணனின் உடன்பிறந்தான் என்ற ஒரு கதாபாத்திரம் வியாசபாரதத்தில் இருந்திருக்கலாம். கலப்பையை ஏந்திய வேறு ஏதோ இனக்குழுவுடைய தெய்வம் அதனுடன் கலந்திருக்கலாம். பின்னர் அந்த தெய்வமே முக்கியத்துவமிழந்திருக்கலாம்.

நான் உருவாக்குவது மகாபாரதம் அளிக்கும் குறிப்புகளைக்கொண்டு ஒரு விரிவான சித்திரம்

ஜெ

வேழத்தின் அடி



ஜெ,

நான் வெண்முரசிலே காத்திருந்த விஷயம் இதுதான். எந்த இடத்தில் எந்தச் சரியான புள்ளியில் திருதராஷ்டிரனின் மனம் மாறப்போகிறது? திருதராஷ்டிரர் தன் மகனை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை முன்னர் அவன் பிறந்தபோதே சொல்லிவிட்டார் ஆனால் அவர் அஸ்தினபுரியின் வேழம். ஒரு பெரிய தகப்பன். அவர் எப்படி மாற்ப்போகிறார் என்று பார்த்துக்கொண்டிருந்தேன்

ஒரு டிரமாட்டிக் ஆன தருணத்தில் அவரது மனசு வெளிப்படும் என்று நினைத்திருந்தேன். அப்படி இல்லாமல் அது வெளிப்படும் இடம் மிகமிக நுணுக்கமகா இருந்தது. கண்ணுக்கேதெரியாமல் ஒரு சின்ன மற்றமாக அது வெளிப்பட்டது.அப்படியே அது பெருகி அவரை மாற்றிவிடுமென்பது நன்ரகாவே தெரிந்தது

அந்த சிறிய மாற்றம் வெளிப்படும் நுட்பமான இடம் மிக நிறைவளிப்பதாக இருந்தது. அப்படித்தான் அது நிகழும் என்று தெரிந்தது.

நன்றி ஜெ

சிவம்

அபூர்வ உறவு





அன்புள்ள ஜெமோ,

வெண்முகில்நகரத்தில் காந்தாரியும் கிருஷ்ணனும் பேசுமிடத்தில் உருவாகி வரும் ஒரு நுட்பமான விஷயம் என்னைத் திகைக்கச்செய்தது. அது என் வாழ்க்கையின் உண்மையான அனுபவம். யாரும் இதுவரை இலக்கியத்தில் இதை எழுதி நான் வாசித்ததில்லை.

அம்மா இல்லாத காமமே இல்லாத ஒரு பெண்ற்ணுறவு ஆணுக்கு இருக்கலாம். எல்லாருக்குமா என்றால் தெரியவில்லை. சிலருக்கு இருக்கலாம். அப்படிப்பட்ட உறவு வருமென்றால் அது வேறுமாதிரி இருக்கும். தெய்வம் மாதிரி. அல்லது அதுக்கும் மேலே

அந்தமாதிரி உறவு ஏன் வருகிறது என்பது பெரிய கேள்வி / அத்ற்கெல்லாம் பதிலே வாழ்க்கையிலே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு உறவு எனக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே வந்தது. அவர் என்னைவிட ஆறுவயது மூத்தவர். அம்மா இல்லை. தோழி. ஆனால் எந்தவிதமான செக்ஸ் கவர்ச்சியும் இல்லை. தனிப்பட்ட முறையிலே பார்த்தால் அவரது குரல் பிடிக்கும். நான் மெல்லிசைக்குழுக்களில் பாடிவந்தபோது அவரும் பாடினார். அதுதான் தொடர்பு

அந்த உறவு என்னை மேம்படுத்தியது. ஆனால் என் அம்மா மனைவி எவருக்குமே அது புரியவில்லை. அந்தப்பெண்மணிக்கேகூட அது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அந்தப்பெண்ணின் கணவர் புகுந்து பெரிய ரசாபாசமாகியது. அதன்பிறகு நான் குடிக்கத் தொடங்கினேன். பெரிய குடிகாரனாக இருந்து பிறகு மீண்டு வந்தேன். உங்களுக்குத்தெரிந்த டாக்டரிடம்தான் போனேன்

இப்போது என் மகள் வடிவில் அவர்களைப்பார்க்கிறேன் என்று சொல்லலாம். ஆனால் இந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியே இருக்கமுடியாது என நினைக்கிறேன்

எஸ்

பாலால் எழுதிய கவிதை









அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

குருடனாக இருந்தாலும் திருதராஸ்டிரன் மிக கூர்மையாக ஒரு உண்மைக்கண்டுக்கொண்டான்.அழகென்னும் ஆழ்கடலும், காமமென்னும் பெருங்கலமும்.

கண்ணன் என்னும் பெயருக்கு அர்த்தம் தருவதுபோலவே காரிருள் உடம்பே பெரும் கண்ணானவனும், கண்ணே இல்லாததால் கண்ணும் உடல்போல சதையானவனும் சந்தித்துக்கொள்ளும்போதுதான் இந்த உண்மைவெளிப்படுகின்றது. அந்த இடத்தில் உண்மை வெளிப்படுவதாலேயே வெட்டவெளியல் கண்ட ஒளிபோல மனதையும் கண்போல ஒளியாக்கி போகின்றது.

திரௌபதி பேரழகி என்பது கண்ணுள்ள ஒவ்வொருவரும் கண்டுக்கொண்டது. அந்த பேரழகு என்பது ஒரு பெருங்கடல், அந்த கடலுக்குள் நீந்தி திளைக்க, எல்லை காண, எல்லைத்தாண்ட ஒவ்வொரு ஆணும் கலமாவார்கள் என்பதை திருதராஸ்டிரன் கண்ட இடத்தில் திகைத்தேன். எந்த ஆடவரேனும் சும்மா இருந்தால் அவர்களை சும்மா இருக்க திரௌபதியின் அழகுவிடுவதில்லை. கடலால் அல்லவா கலங்கள் உருவாகின்றது.
ஆழகென்னும் ஆட்கொல்லி ஆட்களை மட்டுமில்லை தன்னழிவுக்கும் காரணமாகும் என்பதை இன்று முழுதும் புதிய கோணத்தில் வெண்முரசு திருதராஸ்டிரன் வாய்வழியாக மொழிந்தபோது, இந்த உண்மையின் சுழலில் சிக்கி கனவில் விழுந்து தவிப்பது போல் உள்ளது ஆனால் அது கனவல்ல கொருதிக்கொட்டும் உண்மை. 

பாஞ்சாலியின் வாழ்வில் அழகுப்படுத்தும்பாடு என்பதே அதன் பெரும் உச்சம் அதனை கொண்டுவந்து நிறுத்தும் தருணத்தில் திரௌபதி இன்னும் ஒருமுழம் வளர்ந்து தெரிகின்றாள். சீதையை அள்ளி எடுத்து சென்று சிறைவைத்து கொன்று உண்டுவிடுவேன் என்றன்கூட எண்ணமுடியாத கோணம் கர்ணன் திரௌபதியைப்பார்த்தது. ஒரு பெண்ணைப்பற்றி நெஞ்சில் விழும் காமவிதை எத்தனை பெரிய கொடுமை உடையது. 

ஆழ்கடலில் இயங்குவது வாழ்வென்று திளைப்பதற்கு என்று படைக்கப்படும்  கலங்கள் மோதி உடையும் அல்லது அமிழ்ந்துது அழியும், அதுவரை அவைகள் கடலை வெல்லவே முயற்சி செய்கிறது. எந்த அலையும், எந்த புயலும் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் அண்ணியை தனது இச்சைக்கு உட்படுத்த கொலை செய்தவன், பின்பு சிறையில் கழுத்தறுத்துக்கொண்டு செத்தவன் கதை சொல்வது காமத்தின் இருமுனை அழிவை.  

திருதராஸ்டிரன் திரௌபதியை நினைத்து கலங்கும் அந்த இடத்தில் திரௌபதியை மணந்ததால் பாண்டவர்கள் ஐவரும் அண்ணன் என்ற வடிவத்திலும், கர்ணனையும்சேர்த்து கௌரவர்கள் நூறுவரும் தம்பி என்ற வடிவத்திலும் நிற்கும் ஒரு தோற்றம் கண்டேன். அண்ணியோ, தம்பிமனைவியோ யாராக இருந்தாலும் பார்க்கும் விழிகளில் பெண்களில் உள்ள அன்னையின் வடிவம் மறைந்துபோகும் என்றால் என்ன நடக்கும் என்பதை திருதராஸ்டிரன் அறிவது அர்த்தம் உள்ளது. பதினோறு மனைவிகளிடம் நூற்றி இரண்டு பிள்னைப்பெற்ற அவனன்றி வேறு யார் காமத்தை அறிந்துவிடமுடியும்.

கடத்திற் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்திற் புணையென யான்கடந்தேன் சித்ர மாதர் அல்குல்
படத்திற் கழுத்திற் பழுத்த செவ்வாயிற் பனையில் உந்தித்
தடத்திற் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே- என்று அருணகிரி நாதசுவாமிகள் கந்தர் அலங்காரத்தில் சொல்கிறார்.

பெண் அழகாக இருப்பதும், அழகே காமத்தின் ஆட்சிப்பீடமாவதும் பெண்செய்த குற்றமா? தியாகேஸ்வரி மட்டும் இல்லை காமேஸ்வரியும் அவள்தான். அவள் அன்னை என்பதை அறியும் நாள்வரும் நாளில் அவள் அன்னை இன்றி வேறு ஒன்றும் இல்லை. அன்னை என்று அறியும் நாள்வரும்வரை பெண் உடல் அன்றி மற்றொன்று இல்லை.

சீதையை முன்னம் இராவணன் பார்த்தது இல்லை, சூற்பநகையின் மூலம் கேட்டே அறிகின்றான். சீதையை முன்னம் அனுமான் பார்த்தது இல்லை. ஸ்ரீராமன் மூலம் கேட்டே  அறிகின்றான். ராவணனுக்கள் சீதை பெண் உடல் என்னும் ஆலகாலமாய் நிறைந்தாள். ஸ்ரீஆஞ்சநேயருக்குள் சீதை அன்னை என்னும் அமுதமுமாய் நிறைந்தாள். இங்கு சீதை செய்தது எதுவும் இல்லை. எல்லாம் மனம் செய்த மாயம். அவனுக்கு எமன்வீடும், இவனுக்கு அழியா புகழ்வீடும் அவள் தந்தாள். தந்ததால் அவளே இருவருக்கும் அன்னையும் ஆகினாள்.  

கண்ணன் சொல்வதுபோல் திரௌபதி “அனைத்தும் கொண்ட அன்னை வடிவம்” 
திருதராஸ்டிரன் இடத்தில் நிற்கும்போதுதான் திரௌபதி அமுதம்பாதி, ஆலகாலம்பதி சேர்ந்து செய்த சிற்பம் எனத்தெரிகின்றது.

புலன்வழி செல்லும் ஆடவன் ஒருவனுக்கு, அவனுக்கு அவனே எமனாகின்றான். புலன்வழி செல்லாத பெண்ணுக்குகூட அவளே அவளுக்கு எமனாக இருப்பதை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது.

இறைவா!
பாலால் எழுதிய கவிதைக்கு
சிலநேரம்
குருதியால் முற்றுப்புள்ளிவைக்கும்
கொடியவானா நீ?
..... .....   ....
ஏன் இந்த மௌன புன்னகை?
... .... .....
பாலே அன்னையின் குருதியடா என்கிறாயா?
 ... ... ... ....

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்

Monday, March 30, 2015

துவாரகையின் பொருளியல்





அன்புள்ள ஜெயமோகன்,

வெண்முரசு இன்றைய பகுதியில் கிருஷ்ணனின் பொருளாதார முறைமைகள் குறித்த குறிப்பு வருகிறது. வணிகத்தில் திறமை கொண்ட ஒருவரை அவர் உப்பு பரப்பியதை வைத்தே அறிகிறான். அவரை துவாரகைக்கு ஈர்க்க முயல்கிறான். துவாரகையின் வளர்ச்சி அது மாபெரும் சந்தை என்பதை வணிகர் புரிந்துகொண்டதனாலேயே உருவாகியது. அதையே கிருஷ்ணன் வணிகருக்கும் புரியவைக்கிறான். வணிகரைக் கட்டுப்படுத்தியே பொருளீட்டி வந்த ஷத்ரிய அரசுகளின்கீழ் பணியாற்றிய அவ்வணிகருக்கு முதலில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பின்பு இயல்புநிலைக்குத் திரும்பும் அவர், கிருஷ்ணனிடமே தன் விளையாட்டைக் காட்ட முயல்கிறார். அனைத்தும் தெளிவடைந்தபின்னும் ஐயத்துடன் திரும்புவதாகக் காட்டிக்கொள்கிறார்.

இன்றைய பொருளியல் jargon கொண்டு சிந்திக்கும்போது ஷத்ரிய அரசுகள் சோஷலிச முறையில் இயங்குகின்றன. வணிகத்தை முடிந்தவரை "கட்டுப்படுத்த" முயல்கின்றன (planning commission போன்ற அமைப்புகள் மூலமாக). கிருஷ்ணன் புதுவிதமான முறையைக் கொண்டுவருகிறான். அது இன்றைய capitalism போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அத்துமீறக்கூடிய கார்ப்பரேட்டுகளைக் கட்டுப்படுத்த ஒருகையில் வாளும் மறுகையில் தராசுமாக (justice system?) அவன் அரசு இயங்குகிறது. கார்ப்பரேட் மனத்தைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவர்களைப் பயன்படுத்தித் தன் நாட்டை வளப்படுத்திக்கொள்ளும் கலையில் வல்லவனாகவே கிருஷ்ணன் காட்டப்படுகிறான்.

குஜராத் மூவாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் இயங்கிவருகிறதா? அதனால்தான் குஜராத் வணிகசமூகமாக ஆகியதா? இன்றைக்கும் குஜராத்தின் வளர்ச்சி உலகவணிகர் அனைவராலும் ஏற்பட்டதுதானே? சோஷலிசமுறை capitalism ஆக மாறியதே கிருஷ்ணனைப் பேரரசன் ஆக்கியது போலும்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.

வெண்முகில் நகரம்-56-காது குத்தல்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

கண்ணற்றவன் மருமகள்மீதுக்கொள்ளும் அச்சம் மிக அற்புதமான உள்ளத்தவிப்பின் வெளிப்பாடு. திரௌபதியைப்பற்றிய ஒரு அழகிய கோணம். அழகின் மென்மையை பற்றி பேசவந்த இடத்தில் அந்த அழகு மென்மையின் மின்னல் மின்சாரத்தை தொட்டுவிட்ட துடிப்பு. உண்மைதான் எத்தனை ஆழமகா சுடுகின்றது. 

“யாதவரே, மந்தார மலை பாற்கடலை என பெண்ணுள்ளத்தை அறிபவர் நீர் என்பது சூதர் சொல். சொல்லும், அவள் எத்தகையவள்? அகந்தை கொண்டவளா? ஆட்டிவைப்பவளா? கடந்துசென்று அமைபவளா? இல்லை அன்னைவடிவம்தானா?” கிருஷ்ணன் “ஏன், அவையனைத்தும் கொண்ட அன்னைவடிவாக அமையக்கூடாதா?” என்றான். திருதராஷ்டிரர் சற்று திகைத்து “ஆம், அதுவும் இயல்வதே. அதுவும்கூடத்தான்” என்றார்.

முழுக்க முழுக்க வடிவமே இல்லாமல் ஒரு வடிவத்தில் வந்து நின்று சுழற்றி அடிக்கும் திரௌபதி வடிவம். கண்ணில்லாதவன் கண்ட முழுவடிவம். கண்ணில்லாதவன் அகம் எத்தனை திகைத்திருக்கும். திருதராஸ்டிரன், ஒரு நிமிடம் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து தாவி தாய் என்னும் ஸ்தானத்தில் நின்று கருப்பையை தொட்டுப்பார்க்கும் தவிப்பு ஏற்பட்டது. ஒரு தந்தையாக திருதராஸ்டிரன் தொட்ட உச்சமான இடம். அவையில் கர்ணனிடம் திரௌபதி மூடிசூடி அரியணை அமர்வதில் உனக்கு வருத்தம் உண்டா அங்கநாட்டரசனே என்று திருதராஸ்டிரர் கேட்டபோதே அந்த இடத்தை அடைந்துவிட்டார். அந்த அக உருவத்தைதான் இன்று கண்ணனிடம் வேறு வேறு வழியல் வைக்கின்றார். அவர் வைக்கும் அத்தனையும் சரிதான். இத்தனை கூர் நோக்கத்தைதான் ஞானம் என்று சொல்கின்றார்களா?

எதிரதாக் காக்கும் அறினார் கில்லை
அதிர வருவதோர் நோய்- என்று வள்ளுவர் சொல்கின்றார். அங்கநாட்டு அரசன் திருமணம், துரியோதனன் திருமணம், பாண்டவர்களுக்கு திருமணம் என்று திருதராஸ்டிரன் செல்லும் எதிர்காலம் அற்புதம். விதியை மதியால் வெல்லாம் என்று சொல்கின்றார்ளே உண்மையா?

தன்நெஞ்சறிவது பொய்யற்க என்றும், நெஞ்சறியாது ஒரு வஞ்சம் இல்லை என்றும் சொல்கின்றார்கள். பெரிய பெரிய பாறைகள் வைத்து எல்லாம் கோட்டைகள் கட்டுகின்றார்கள். சின்ன அரசமரவிதையல்லவா விழுந்து முளைத்து கோட்டையை இரண்டாக்கிவிடுகின்றது.

திருதராஸ்டிரன் வெகுதூரம் சென்று பெரும்பெரும் கட்டுமானங்கள் வைத்து பங்காளி சண்டை வராமல் பார்த்துக்கொள்ள திட்டம்போடுகின்றான் ஆனால் வாரணாவதம் என்னும் அரசமரவிதை அந்த பங்காளிக்கோட்டைக்குள் விழுந்ததை ஊர் வம்பு, யாரே செய்த சதி என்கின்றான் திருதராஸ்டிரன். 

நம்பிக்கை என்பது வேறு, பாசம் என்பது வேறு. நம்பிக்கை என்பது உண்மையால் ஆனது அதற்கு வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு இல்லை. பாசம் என்பதற்கு வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு உண்டு. திருதராஸ்டிரன் துரியோதனாதிகளை நம்புவதும், சகுனியை நம்புவதும் அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையால் என்று அவன் சொன்னாலும் அவன் நம்புவது அவர்கள் மேல் உள்ள பாசத்தால். அவன் எத்தனை கதைக்கட்டினாலும் பெத்தபாசம் அவனை வாரணாவதத்தை செய்தது தனது மகன் இல்லை என்று சொல்லச்சொல்கிறது. அவன் நம்பி அதை சொல்லவில்லை, கண்ணன் நம்பவேண்டும் என்று சொல்கின்றான். சகுனி முன்னமே அறத்தின் கோட்டை தாண்டி இருக்கிறான் என்று சொல்லும்போது திருதராஸ்டிரன் கைவிரல்கள் நடுங்குவதே அதற்கு சாட்சி. 

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். 


இந்த கதையின் தொடக்கத்தில் சத்யகி உணர்வது திருதராஸ்டிரன் இருட்டில் அமர்ந்து இருக்கிறான் என்பதை. அந்த குறிப்புதான் எத்தனை அற்புதம் நிறைந்தது. கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து உச்சம்பெரும்போது திருதராஸ்டிரன் உடல்தளர்வதை இருட்டின் அசைவாக சாத்யகி காண்கின்றான். அன்புள்ள ஜெ இந்த குறிப்பின் வழியாக திருதராஸ்டிரன் எத்தனை பெரிய ஆழத்திற்கு இன்று ஒருநாளுக்குள் சென்றுவிட்டான் என்பது தெரிகின்றது. ஆதே வேளையில் எனது மகன், பாண்டவர்கள் என்ற பாகுபாட்டையும் வாய்வழியாக வெளியிட்டு கண்ணன் கண்டுகொள்ள நிற்கின்றான். நீங்கள் சும்மா படைபூக்கம் இல்லாமல் வெறுமனே எழுதி செல்லகின்றீர்கள் என்று சொல்லும் மக்கள் இதை எல்லாம் கண்டு இருட்டில் பகுங்கி கத்துகின்றார்களோ? போகின்ற போக்கில் இந்த மாதரி எப்படி எழுதுகின்றீர்கள் இந்த உண்மையை அவர்களுக்கு சொல்லிவிடுங்கள், அவர்களின் பிரச்சனையே இதுதான். கற்பனை பண்ணமுடியாத தூரத்திற்கு  இந்த ஜெபோகின்றார் அதனால அவர் எழுதுவது எழுத்தே அல்ல? சரிதானே. ராமனாக இருக்க முடியாது அதனால ராமன் மனுசனே இல்ல? ராமா..ராமா..ராமா...

திருதராஸ்டிரன் முழுவடிவம் கிடைக்கும் இன்றைய தினத்தில் அவன் அகம் கொள்ளும் பயமும் தெரியவருவதில் அவன் பாத்திரம் முழுமை பெருகின்றது. மற்றவர்களில் இருந்து தனித்துவம் நிறைந்த மனிதர்கள் உருவாக நினைக்கின்றார்கள் அது ஏதோ ஒரு காரணத்தால் இயலாமல்போகின்றது அல்லது முயலாமையால் இயலாமையாகின்றது. தனித்துவம் என்ற அந்த ஆசை இயலாமையாக ஆகும்போது வெளிப்படும் கண்ணீர்தான் உண்மையில் அவனுக்காக அவன் விடும் கண்ணீர். அந்த கண்ணீர் மற்றவர்களுக்கு பரிகாசமாக, அர்த்தம் அற்றதாக இருக்கும் ஆனால் அந்த கண்ணீரைவிடுபவன் மட்டுமே அறியமுடியும் அதன் ஆழமும் நீளமும். இந்த கண்ணீரை விதியின் கவிதை என்று சொல்லலாம், அதை விடுபவன்கூட அதை விளக்கிபொருள் சொல்லமுடியாது.

திருதராஸ்டிரன் விடும் கண்ணீர் விதியின் கவிதை. கண்ணன்போன்றவர்களின் நட்பு கிடைத்து அவன் எத்தனை அடித்து துரத்தினாலும் கூச்சமே இல்லாமல் அவன் பாதமே பதம் என்று விழுந்தால் தப்பிக்கலாம். அந்த கண்ணீர் நிற்க வாய்ப்பு உண்டு. அதற்கு பந்த பாசம் விடுவதில்லை. துறக்க மனம் வருவதில்லை. எமன் எடுத்துக்கொள்ளும்வரை தனக்கு கொடுக்கதெரிவதில்லை. கண்ணும் இல்லாமல், சொல்கேட்கும் செவியும் இல்லாமல், நடுங்கும் உள்ளத்தோடு இருட்டில் இருந்துக்கொண்டு கண்ணன்போகும் வேளையில் கண்ணனை செவியால் உற்றுநோக்கும் ஜென்மகங்கள் அறியுமா? இதைத்தான் வள்ளுவர் கேள்வியால் தோட்கப்படாத செவி என்கின்றாரா?

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 

ஜெ இந்த கண்ணன் தூது வந்தவன்தான் என்றுதான் நினைத்தேன் இந்த திருக்குறளுக்கு பின்புதான் தெரிகின்றது அவன் வந்தது காது குத்தவென்று. அவன் காது குத்தியபோது அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் இந்த திருதராஸ்டிரன் இன்றும் இனியும் கண்ணனை செவியால் உற்றுநோக்கிக்கொண்டு இருக்கவேண்டி இருந்து இருக்காது. திருதராஸ்டிரன் அகத்தைவிட அவன் காதுக்கு கண்ணனை நன்றாக தெரிந்து இருக்கிறது அதனால்தான் அவனை அது உற்று நோக்குகின்றது, காதே ஒரு கண்ணாகி. அவன் சொல்லில் பயன் உண்டென்று காதே நீ அறிவாய். 

  
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

Sunday, March 29, 2015

கண்ணன் இடையன் கடையன்.

 
 
கண்ணன் யாதவன் அதனால் இடையன், அவன் இளையவன் அதனால் கடையன்.

இடையன் என்பதால் எதிலும் இடைஇடையே இருக்கிறான். ராதைக்கும் கம்சனுக்கும்இடையில் இருக்கிறான். காமனுக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கிறான். உயர்ந்தவருக்கும் எளியவருக்கும் இடையில் இருக்கிறான். குந்திக்கும் திரௌபதிக்கும் இடையில் இருக்கிறான். அஸ்தினபுரிக்கும் பாஞ்சாலத்திற்கும் இடையில் இருக்கிறான். தருமனுக்கும் திருதராஷ்டிரனுக்கும் இடையில் இருக்கிறான். கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் இருக்கிறான். சகுனிக்கும் கணிகருக்கும் இடையில் இருக்கிறான். அஸ்தினபுரி குலச்சபைக்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கிறான். முதியவனுக்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கிறான். பேச்சுக்கும் பேசாமைக்கும் இடையில் இருக்கிறான். ஒவ்வொருவர் உடம்புக்கும் மனசுக்கும் இடையில் இருக்கிறான். இடையில் இருப்பதாலேயே கடைந்துக்கொண்டே இருக்கிறான் அதனால் கடையன். அவன் பலராமருக்கு இளையவன் என்பதால் கடையவன் அதனாலும் கடையன். 

இடையனாக இருப்பவன்தான் தூதுவனாக இருக்கமுடியும். கடையும் திறமை இருந்தால்தான் தூதில் வெற்றிப்பெறமுடியும்.
கண்ணனைபோல் இடையன் கடையன் இனி மண்ணில் இல்லை இதற்கு முன்னும் இல்லை. வெண்முரசு இந்த இடையனை கடையனை உடையவனாக்கி செல்வது அற்பும். ஜெ இடையனை கடையனை காட்டிக் காட்டி சித்திரவீதியில் ரதமோட்டுகின்றீர்கள். 

ஏன் இந்த இடையன் இடையில் இருந்து கடைகின்றான்? கடைதல் அவனுக்கு பிடித்தது. மேருமலையை மத்தாக்கி அந்த மத்தை தாங்கும் கூர்மமாகி முன்னமே பாற்கடலை கடைந்தவன் அவன். கடைதல் என்னும் பாரம்பரிய பண்பு அவன் குருதியில் இருக்கிறது. அவன் எந்த வேஷம்போட்டாலும் அவன் டி.என்.ஏவில் கடைதல் மரபணு உள்ளது. ஏன் இந்த மரபு அணு அவன் குருதியைவிட்டு விலகுவது இல்லை? அவனுக்கு தெரிகின்றது. என்னதான் பார்க்கடலை படுக்கை அறையாக பயன்படுத்தினாலும் அதில் துளியேனும் ஆலகாலம் இருக்கும் என்பது. அவன் இந்த தூதுக்கு வருவதற்கு முன்னமே “துளி விடம் இல்லாமல் பாற்கடல் நிறைவடைவது இல்லை“ என்று சொல்லிவிட்டுதான் வந்தான்.
கடைவதன்நோக்கம் அமுதம்பெறுவது மட்டும் இல்லை. ஆலகாலத்தை நீக்குவதும்தான் அல்லது பாற்கடலுக்குள் விடம்இருக்கு என்று காட்டுவதற்கும்தான். பாற்கடல் கடையப்படும்வரை அதற்குள் விடம் இருக்கு என்பது யாருக்கும் தெரியாது? தேவரும் அசுரரும் நினைத்தது அதற்குள் அமுதம் இருக்கு என்பதை மட்டும்தான். கடைந்தபிறகே பாற்கடலுக்குள் விடமும் இருக்கு என்று தெரியவந்தது. இந்த கடைதல் மூலமுமே சகுனியின், துரியோதனின்,கர்ணனின், திருதராஷ்டிரனின் மறுமுனையாகிய விடத்தை பிரித்து வைத்துவிடுகின்றான். குறிப்பாக பாஞ்சாலி என்ற சொல் எழும்போதெல்லாம் கர்ணன் பதரும் பதற்றத்தில் இருந்து தெறிப்பது அவனுக்குள் உள்ள ஆலகாலம். 
 
கண்ணன் இந்த தூதுக்கு வந்தது பாண்டவர்களுக்கு நாடுகிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டும் என்றால் அவன் ஏன் இத்தனை விளையாடவேண்டும்? இங்குதான் கண்ணன் தனது கடையும் தொழிலை தொடங்குகின்றான். பேசுவதன் மூலம் வாழும் பேசும் கணிகரை பேசாமல் செய்துவிட்டான் அது சாத்யகியின் கண்களை கொண்டு கணிகரை கடைந்தது. பாதிவிழிமூடி பாதிவிழி திறந்து யோகத்தில் இருக்கும் கர்ணன் அதிகமாக எதுவும் பேசுவது இல்லை ஆனால் இன்று அவனை பேசவைத்துவிட்டான் இதன் மூலம் அவன் நாக்குக்கு அடிபணிந்து அதன்மூலம் விடம் கக்கவேண்டும் என்று செய்துவிட்டான். “யாகாவராயினும் நா காக்க” கர்ணா அறிவாயா?. உன் நாக்கை இந்த கண்ணன் அவிழ்த்துவிட்டுவிட்டான் இனி அது ஓயாது.  கர்ணனை கடைந்தது கண்ணனின் கண்கள். சகுனியின் இடம் என்ன என்பதை குலக்குழுக்களின் மூலம் அறியவைத்துவிட்டான். சகுனியை மட்டும் அல்ல சகுனிக்கு வக்காலத்து வாங்கும் துரியோதனனும் வெளியேற வேண்டும் என்று குலக்குழு மக்களை சொல்லவைத்துவிட்டான். சகுனியையும், துரியோதனனையும் சூழ்நிலையால் கடைகின்றான்.

உலகின் பெரும் தந்தை என்று போற்றப்படும் திருதராஷ்டிரன் குழந்தைகளால் காய்த்து தொங்கும் ஒருபெரும் பலாமரம், அதனிடம் இருந்து வடிவது எல்லாம் தந்தைமை என்னும் தேன்சாறு என்று நம்பவைத்தவன் இடம் நீ்ங்காமல் இருப்பது புத்தரபாசம் என்னும் தீராபிசின் என்பதை தருமனின் வார்த்தை மூலம் கடைகின்றான்.

//இது அவன் நாடென்றால் வந்து என்னிடம் அவை நின்று அல்லவா சொல்லவேண்டும்?” கிருஷ்ணன்இதையே நானும் சொன்னேன். ஆனால் அவர் இங்கு வர விரும்பவில்லை. தங்கள் முன் நின்று சொல்லும் விழி தனக்கில்லை என நினைக்கிறார். ஏனென்றால் தாங்கள் அவரிடம் அரசு ஏற்கவே ஆணையிடுவீர்கள் என்றார். அதை மறுக்க அவரால் முடியாது. ஆனால் தங்கள் உள்ளம் அதை சொல்லவில்லை என அவர் உள்ளம் அறியும். காரணம் எந்தத் தந்தையும் ஆழத்தில் வெறும் தந்தையே. தன் மைந்தனின் நலனை அன்றி பிறிதை அவர் விழையமாட்டார்என்றான்//

கண்ணன் தனது தூது மூலம் நிறுவ வந்தது பாண்டவர்கள் பங்கு என்னும் நாடு ஒரு பாற்கடல், அந்த பாற்கடலுக்குள் தேங்கி இருக்கும் ஆலகாலவிடம் எது என்பதை காட்டுவதற்காக அவன் கடைந்த கடையல்தான் இந்த தூது.

மத்து இருந்த இடத்தில் இருந்து சத்தம் இல்லாமல் சுற்றுகின்றது மோர்பானை எத்தனை ஆர்ப்பாட்டாய் சத்தம்போட்டு தனக்குள்ளேயே மோதிக்கொள்கின்றது.  இந்த கண்ணன் நிறைய பேசுவான் என்று நினைத்தேன் ஆனால் அவன் அதிகம் பேசவில்லை, கண்ணன் இங்கு அதிகம் பேசாதது அற்புதம் ஜெ.  

அவன் அமுதம் குடித்த அமரர்களை கும்பிடவைக்கிறான் ஆனால் ஆலகாலம் குடித்த திருநீலகண்டன் தியாகேசனை கும்பிடுகின்றான். அவன் கடவுளைக்காட்டுவதற்காகத்தான் அமுதம் எடுக்கும் சாக்கில் ஆலகாலத்தை காட்டுகின்றானோ?
 
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.