Tuesday, October 31, 2017

முழுமை



வணக்கம் தலைவரே,

எழுதழல் 39 , படித்து முடித்தவுடன் உடனே ஒன்று தான் தோன்றியது , ஒரு பங்காளி  சண்டையை , கிட்டத்தட்ட வர்க்க மோதல் , கொள்கை  மோதல் மாதிரி கொண்டு போயிட்டிங்க , அதுவும் சரி தான் , இல்லைனா எப்படி துரியோதனனால  அவ்வளவு பெரிய கூட்டணியெ சேர்க்க முடியும். மார்க்சிஸ்ட்  மஹாபாரதம் . ஆனா எந்த ஒரு கொள்கை மோதலில் அதுவும் ஆயுத மோதலில் முடிவு ஒட்டுமொத்த அழிவுதான் , எங்கயோ எப்போவோ படிச்சது " டால்ஸ்டாய்  கதைகளில் முடிவில்  எல்லா முதன்மை கதாபாத்திரங்களும் இறந்து விடும் , செகோவ் கதைகளில் எல்லாரும் உயிருடன் அனால் மன தளவில்  அனைவரும்  இறந்துபோயிருப்பார்கள் ", வியாசர் கதையில் எல்லாரும் செத்தும் போயிறாங்க , உயிரோட இருக்கறவனுகளும் சந்தோஷமா இல்லை , என்னோவோ போங்க ,

ஆனந்த் நடராஜன்

அன்புள்ள ஆனந்த் நடராஜன்

வரலாற்றை முழுமையாக ஆராய முயன்றிருக்கிறேன் என்றே சொல்லிக்கொள்வேன். ஒருபக்கம் ஆன்மிகமான, தத்துவம் சார்ந்த ஒரு தேடல். மறுபக்கம் பொருளியல் , அர்சியல் சமூகவியல் தேடல். அனைத்தையும் குவிப்பதற்கான முயற்சி இதன் விரிந்த வடிவம். மார்க்சியக் கோணம் முந்தைய இரண்டையும் முற்றாக விலக்கிவிடும் அல்லவா?

ஜெ

நீறு பூத்த நெருப்பு (எழுதழல் - 27)



   
நீறு  பூத்த நெருப்பு என்பதற்கான  பொருள் இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு தெரியுமா என்பது ஐயமேவிறகு வைத்து எரியூட்டப்படும் அடுப்புகளில் சமையல் முடிந்த பிறகு சாம்பல் நிறைந்திருக்கும். அதை ஊதி விட்டுப்பார்த்தால் அதனுள் நெருப்புக்  கங்கு  சிவந்துகொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த சாம்பல் நெருப்பை மறைத்திருக்கலாம்ஆனால் படர்ந்திருக்கும் அந்தச் சாம்பலினாலேயே அந்நெருப்பு அணைந்துபோகாமல் நீண்ட நேரம்  இருக்கமுடிகிறது. சாம்பலை நெருப்பு தோற்றுவிக்கிறது. அந்தச் சாம்பல் நெருப்பை எளிதில் அணைந்து போகாமல் காத்திருக்கிறது. இப்படி  ஒன்றுக்கொன்று ஆதாரமாக இரண்டும் விளங்குகின்றனஇந்த பூமியே நீறு பூத்த நெருப்புத் துண்டுதான்.   பனிமுகடுகள் கொண்ட மலைகளென,   அடர்ந்த  வனங்களென, பாலைமணல்பரப்புகளென, அலைபெருகிஎழும் பெருங்கடல்களென இருப்பவையெல்லாம் அக்கினிக்குழம்பென உள்ளிருக்கும் புவிக்கோளத்தின் மேல் பூத்திருக்கும் சாம்பல்தான் என்பது நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால்  அதுதான் உண்மை. இந்தச் சாம்பல் பரப்பை புவியின் அந்த அனல்குழம்பே தோற்றுவித்தது. புவியின் வெப்பத்தை இச்சாம்பல்  பரப்பே குளிர்ந்துபோகாமல் காத்துவருகிறது.
            

காதல் திருமணங்களில் மட்டும்தான் காதல் என்பதில்லைபெற்றோர் பார்த்து   வைத்து நடைபெறும் திருமணங்களிலும் தம்பதியர்க்கிடையில்  ஓரிரு நாட்களில் அதே அளவு காதல் வளர்ந்துவிடுகிறதுஆண் பெண்ணைப் பார்க்கையில் காமத்தீப்போறிகள் தோன்றுகின்றனதன் இணை தான் இணை சேர பொருத்தமானவர் என உணரும்போது அது தீயென பற்றி எரிகிறது. மனம் காமத்தைத் தாண்டியும் தன் இணையிடம் நேசம்கொள்கையில் அக்காமத்தின்மேல் காதல்  நீறென மலர்கிறதுபின்னர் அவர்கள் காதலைமட்டுமே   முதன்மையாக கொள்கிறார்கள்ஆனால் அடியில் காமம் தீக்கங்கென  இருந்துகொண்டிருக்கும்.    இப்படி கொள்ளும் காமமும் காதலும்தான்  தம்பதியர் இருவரை வாழ்நாள் முழுவதும்  இணைத்திருக்க வைக்கிறதுவயதாகும்போது காமம்  குளிர்ந்துபோகும்தான். ஆனால் அது முழுமையாக காதலென அவர்களுக்கிடையே பூத்திருக்கும்இருவர் மண வாழ்க்கையில் இணையும்போது காமமும்  காதலும் அவர்களுக்கிடையில் தோன்றாவிட்டால் ஒருவருக்கொருவர் இணக்கம் தோன்றாமலேயே போய்விடும்.      அப்படி இருவருக்கும்  இடையில் இவை இல்லாமல் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகிறது.  
  

அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் இடையில்  காமமோ காதலோ முதல் சந்திப்பில் தோன்றாமல் போய்விடுவது நம் மனதிற்கு உறுத்தலாக இருக்கிறதுஇருவருக்கும் மணமென உறுதி செய்யப்பட்டுவிட்டதுஆகவே மனதில் ஒவ்வொருவருக்கான எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும்அந்த எதிர்பார்ப்பே காதலை தோற்றுவிக்கும் என நினைத்திருந்தோம்

ஆனால் இருவருக்கும் இடையில் அந்த நெருப்பு பற்றிக்கொள்ளவில்லை.     காதல் தோன்றுவதற்கு  சற்று அறியாமை அவசியம் என்று கருதுகிறேன். அபிமன்யு தன் தந்தையைப்போலவே நிறைய பெண்களை அறிந்திருப்பவனாக இருக்கிறான்.   அதனால் உத்தரையை ஒரு பெண் எனக் காண்பதிலேயே அவனுக்கு ஒரு பரவசம் ஏற்படவில்லை எனத் தோன்றுகிறதுஆனால், ஒரு பெண் தன் பாவனைகளால் தன்னை புதிராக காட்டிக்கொள்வாள்அதற்கான நாடகத்தை ஒரு பெண் தான் அறிந்தும் அறியாமலும் நடத்துகிறாள். அதனால் எத்தனை பெண்களை அறிந்திருக்கும் ஒருவனுக்கு இன்னொரு  பெண் புதிரானவளாக புதிதானவளாகத் தோன்றுவாள்.    ஆனால் உத்தரை  இத் திருமணத்தில் சற்றும் ஆர்வமில்லாதிருப்பதால் அவளிடம் அந்த பாவனைகள் எழவில்லைஅதனால்  அபிமன்யு அவளால் கவரப்படாமல் போகிறான் என்று தோன்றுகிறது
  

ஒரு பெண்ணுக்கு ஒருவன் தன் மணமகன், தன்  வாழ்நாள் துணை என்று அறிகையில் இயல்பாக அவன்மேல் விருப்பும் ஈர்ப்பும் ஏற்படும். ஆனால்  உத்தரைக்கு அபிமன்யுவைப் பார்க்கையில் அப்படி எந்த உணர்வும்  தோன்றாமல் போய்விடுகிறதுஅவள் சில நாட்கள் முன்பு தான்கொண்டிருந்த காதல் அடைந்த தோல்வியின் நிழலில் இன்னும் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் அபிமன்யு  அர்ச்சுனனின் மகன் என்பது அவளுக்கு ஒரு ஒவ்வாமையை உருவாக்கி இருக்கலாம்அதனால் அவள் மனதில் காதல் தோன்றவில்லை, அதன் காரணமாக அவளிடம் ஆணை ஈர்ப்பதற்காக இயல்பாக ஒரு பெண்ணிடம் எழும் பாவனைகள் தோன்றவில்லைஇதுவே அபிமன்யு மற்றும் உத்தரை மனங்களில்  காதல் பூத்த காமம்  எனும் நெருப்பு இதுவரை எழாமல் உறைந்து போய் இருப்பதற்கு காரணமென்று நினக்கிறேன்.  


தண்டபாணி துரைவேல்