ஜெ,
இப்போது மழைப்பாடலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
அதன் மகத்தான பிளான் இப்போதுதான் புரிகிறது. அது வேதங்கள் விளைந்த நிலங்களை முதல்பார்வையில்
காட்டுகிறது. சிந்துவுக்கு அப்பால் தொல்வேதம் விளைந்த மேற்கு. அதன்பின்னர் புதியவேதங்கள்
விளைந்த நிலமாகிய கங்கை நிலம். போர் இந்த இரு நிலங்களுக்கு இடையேதான். வென்றது புதியவேதம்.
இத்தகைய பிரம்மாண்டமான திட்டம் உங்களுக்கு முதலிலேயே இருந்ததா இல்லை எழுத எழுத உருவாகி
வந்ததா என்று தெரியவில்லை. முன்னரே இருந்திருந்தால் அது ஒரு பெரிய தரிசனம்தான்
சங்கர்