சற்று ஏக்கமாக இருந்தது. எப்படி ஒரு முழு பித்து கூடிய ஒரு வாழ்வு. அப்படி ஒரு உலகத்தை எழுத முடிந்ததுநினைத்து மிக தள்ளி போன கனத்த மனதோடு படித்து கொண்டு இருந்தேன்.
கட்டத் தமிழ். திரும்ப திரும்ப வாசிக்க வைத்து அதனுள் வசிக்க வைக்கும் தமிழ். உங்கள் இஷ்டத்திற்கு அல்லது அதுதன் விருப்பத்திற்கு ஏற்ப வளர்த்தி வருகிறது. 10-13 பாகங்கள் பல காலத்திற்கு ஆழம் பயில கடினகிணறு. திணறுகிறது ஆனாலும் இழுக்கிறது. இன்று 15வது மட்டும் சற்று நீர் விட்டு வெளிய வந்ததாக உணர்வு.
கண்ணா என்று பெயர் இட்டு அள்ளி முத்தம் இட ராதை ஊறி என்னுள் நெகிழ்ந்து மின்னி சென்றாள். இன்று குழல்ஊதும் போது அடைந்த ஒரு கண நிறைவும் அப்படியே. காலடி எடுத்து வைக்கும் கால வருணனை குளிர்ச்சியானஇதம். அவனின் ஒவ்வொரு நிகழ்வும் இங்ஙனம் அற்புத நேரங்ககளில் உச்ச கட்ட அன்பின், மகிழ்ச்சியின்கொண்டாட்டமாய் செல்கிறது. தினமும் சென்று பார்த்து மிதந்து வாழும் ராதையின் உலகம் ஆசீர்வாதம் - கற்பனையாக இருந்தாலும் கூட...எதிர்பாராத கதவின் வழியாக வருகிறான் நீலன். ஆண்களின் அண்மையை அவனிடம் கழற்றி வைத்து விட்டீர்கள் போல் உள்ளது ??
அன்புடன் ,
லிங்கராஜ்