Wednesday, January 7, 2015

புதிர்மகள்


[பாஞ்சாலியும் கிருஷ்ணனும். கதகளியில்]

ஜெ,
சின்னக்குழந்தைகள் பிறந்ததுமே வாயில் கைவைத்துப்பார்ப்பார்கள். அவை நல்ல பசியுடன் இருக்கின்றனவா என்று. பசி இருந்தால் எல்லாம் சரிதான். பெரிய பசி கொண்ட பிள்ளை மிக துடிப்பானது. நாய்க்குட்டியை எடுக்கும்போதும் அதன் பசியைத்தான் பார்க்கவேண்டும்

திரௌபதியை காட்டும்போது அவளுடைய lust ஐத்தான் அதிகமாகக் காட்டுகிறீர்கள். அது அவளுடைய energy யை தான் காட்டுகிறது.  அவள் ஒரு பெரிய force. ஒரு அலைமாதிரி அவள் இந்தியாவை அடித்து சுருட்டிக்கொண்டாள். அதை அந்த ஐந்து கணவர்கள் என்ற விஷயத்தைக்கொண்டே சொல்லிக்கொண்டு போகிறீர்கள்

பாஞ்சாலியை புரிந்துகொள்ள முடியாமல் இந்தியாவே கிடந்து அல்லாடியிருக்கிறது. கிருஷ்ணன் பாஞ்சாலி ரெண்டுபேர்தான் இந்திய்டாவின் மிகப்பெரிய enigma க்கள் என்று தோன்றுகிறது. ரெண்டுபேருக்கும்தான் பலவிதமான விளக்கங்களை எழுதியிருக்கிறார்கள்

கிருஷ்ணனை அவன் கடவுள் அப்டிதான் என்று சொல்லிவிட்டார்கள். பாஞ்சாலியை எல்லாம் அவள் முற்பிறப்பின் விளைவு என்று சொல்லிவிட்டார்கள். ஒரு நவீன பாஞ்சாலியை பார்ப்பது அவள் மீதான அந்த curiosity ஐ எழுப்புகிறது. புராணங்கள் அந்த ஆர்வத்தை இல்லாமல் செய்திருந்தார்கள்


சாரதி