Tuesday, January 6, 2015

பாஞ்சாலியும் ஐந்து கணவர்களும்



வெண்முரசை வாசிக்கும்போது இத்தனை நுட்பங்கள் ஏற்கனவே இதில் இருந்ததே ஏன் நாம் இதுவரை கவனிக்கவில்லை என்ற திகைப்பு வந்துகொண்டே இருந்தது. உதாரணமாக பாஞ்சாலி என்ற வார்த்தைக்கும் ஐந்து கணவர்க்ள் என்பதற்கும் உள்ள தொடர்பு. பஞ்ச குலங்கள் இருந்ததனால் பாஞ்சாலம். அங்கே பிறந்தததால் அவள் பாஞ்சாலி. ஆனால் அவளுக்கு சரியாக ஐந்து கணவர்கள் எப்படி வந்தார்கள்? அதை யோசிக்கவே இல்லை. அந்த விளக்கம் வெண்முரசில் வரும்பொது பிரமிப்பு வருகிறது.

ஐந்துபாஞ்சலாகுலங்களில் இருந்தும் கணவர்களை அவர்கள் எடுத்துக்கொண்டார்கல் என்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அந்தப்பகுதியில் இப்போதும்   Fraternal polyandry இருந்துகொண்டிருக்கிறது. திபெத் நேப்பாள் இமாச்சலப்பிரதேசம் பகுதிகளில் அந்தப்பட்டியலை பழையகால நிலங்களாக நீங்களே நாவலிலே கொடுத்துவீட்டீர்கல். அதை ஏன் இதுவரை நாம் கவனிக்கவே இல்லை?

இந்தப்பகுதிகளில் பெண்வழிச் சொத்துரிமை இருந்திருக்கிறது. அதுதான் சகோதர பலகணவர்முறையாக மாறியிருக்கிறது. அப்படிப்பார்த்தால் குந்தியின் கதையையே புரிந்துகொள்ளமுடிகிறது

வெண்முரசு பல திறப்புகளை அளித்துக்கொண்டே செல்கிறது.

சண்முகம்