ஜெ,
பகாசுரன் என்றாலே பசிதான். பசியே வடிவான அசுரன் அவன். அவனுடைய கதை மகாபாரதத்திலே உள்ள ஒரு சின்ன ஃபேண்டசி. அதை நீங்கள் ஆரம்பித்தபோது அந்தக்கதைக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டிருந்ததற்கும் சம்பந்தமே இல்லையே என்றுதான் தோன்றியது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக் பகனின் பசியைத்தான் நீங்கள் முக்கியமாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்று புரிந்தது.
முதலில் அவனுக்கு இருப்பது அடையாளப்பசி. தன் மூதாதையரைப்போல பெரிதாகிவிடவேண்டும் என்ற பசி அது. அல்லது அந்த மூதாதை என்பதே ஒரு இல்லூஷனாகவும் இருக்கலாம். ஆனால் அவன் அப்படி நினைத்து வளர்கிறான். அந்தப்பசி ஒரு பெரிய மெட்டஃபராக நவாலிலே வளர்கிறது
அதன்பின் அவனுடைய பசி அதிகாரப்பசி. அதுதான் அவனை ஈவிரக்கமில்லாத ஆட்சியாளனாக ஆக்குகிறது. தனக்கென ஒரு நாட்டை ஆட்சி செய்ய நினைக்கிறான். அதற்காக கொள்லையடிக்கிறான்
அதன்பின் இருப்பது வன்மம். தோற்றுப்போனவனின் வன்மம் என்பது பழிவாங்கும் பசி. அவன் தனக்கு சாப்பாடு மட்டும் அல்ல சினம் அடங்க ஒரு ஆளும் தேவை என்று நினைப்பது அதனால்தான்
அந்த பசியின் மொத்த உருவமே பகாசுரன். அந்தப்பசியே அவனை அழிக்கிறது இரண்டே அத்தியாயத்தில் எளிமையாகச் சொல்லப்பட்ட ஒரு குட்டிக்காவியம் மாதிரி இருந்தது. எவராவது தனியாகக்கூட அதை எழுதலாம்
அருண்