Wednesday, January 14, 2015

கர்ணனின் தோல்வி




இனிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இலக்கியமறியா இதழ் வாசகன் எழுதிக்கொள்வது… கேட்பதற்கே மனம், உரையாடலுக்கல்ல என இருந்தே பழக்கப்பட்ட என்னை, எழுதியே தீரவேண்டுமென தூண்டிய உள்ளக்கிளர்ச்சியை அளித்தததற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் பல.

கர்ணன், என்னைபோன்ற எல்லோருக்கும் பிடித்த நாயகன், அவன் தோல்வியை தாங்கவே முடியவில்லை … எனது நிலையழிந்த நிலைபார்த்து, இல்லத்தரசிக்கே விளங்கவில்லை..

ஒரு கதை படிப்பு இவ்வளவு தூரம் நிலையழிய செய்யுமா, அதுவும் ஏற்கனவே பலகோணங்களில் தெரிந்த கதை, என்பதே அவர்களின் முதல்கேள்வி.. ஆனால், இந்த தெரிந்த கதையை நான் இவ்வளவு நெஞ்சார்ந்து தெரிந்துகொள்ளவில்லையே, இதுவரை. 

கர்ணனின் தோல்வி, ஒருவேளை, அவன் நேரடியாக அவமானப்படுத்தப்பட்டிருந்தால்  இவ்வளவு அதீதமாஹ தாக்கியிருக்காதென நினைக்கிறேன்.
இந்த தவிப்பை தொலைத்துவிடக்கூடாதென்ற ஏக்கத்தில் அர்ஜுனன் வெற்றியை படிக்கவேண்டாமென இருந்தேன். ஆனால் …

அன்புடன்
ஜெகன்