ஜெ
வெண்முரசு ஆரம்பித்ததில் இருந்தே அது ஆண்களின் கதையாகவே போய்க்கொண்டிருந்தது. சத்யவதி காந்தாரி குந்தி திரௌபதி போன்று வலுவான பெண்கள் வந்தாலும்கூட அப்படித் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் இப்போதுதான் பெண்களால் நிறைந்துவழிகிறது கதை என்று சொல்லத்தோன்றுகிறது. இந்த விதவிதமான இளவரசிகளின் தோற்றமும் குணச்சித்திரமும் மிகவும் மனசைக்கவரக்கூடியதாக இருக்கிறது
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக இருக்கிறார்கள். அவர்களின் குணச்சித்திரங்களில் எல்லாம் பெரிய மாறுதல்கள் இருக்கின்றன. எல்லாருக்குமே எப்படியோ பூரிசிரவஸை பிடித்திருக்கிறது. காரணம் அவனிட்ம் ஒரு இன்னொன்ஸென்ஸ் இருக்கிறது. மலைப்பகுதிகளைச் சேர்ந்தவனாக இருக்கிறான். அதுதான் அவனை அப்படி ஒரு இனியவனாக ஆக்கி வைத்திருக்கிறது
இந்தப்பகுதி மகாபாரதத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அழகான ஒரு பகுதி என்பதிலே சந்தேகம் இல்லை
எஸ்