ஜெ சார்
வெண்முரசின் பழைய அத்தியாயங்களைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். திருதராஷ்டிரர் வரும் அத்தியாயங்களில் உள்ள தெளிவான புனைவு ஒருமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அதிலும் அந்த பதினாறு ருத்ரர்கள் ஒரு காட்டுக்குள் சிவலிங்க வடிவத்தில் இருக்கும் அத்தியாயம் உச்சகட்ட கவித்துவம் கொண்டது. அந்தக்காட்சியில் உள்ள அழகும் துல்லியமும் அது அப்படியே நீட்சி கொண்டு வரும் பிற காட்சிகளான குருதி மழையும் பிரளயமும் மிகமிகக் கவித்துவமானவை
அந்தக்காட்டை நானே கனவிலே கண்டதுபோல உணர்ச்சி வந்தது. வெண்முரசில் மறக்கவே முடியாது அந்த இடம். மழைப்பாடலை மிகமிக முந்தியே கடந்துவந்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் முழுக்கமுழுக்க உணரத்தொடங்கியிருக்கிறேன்
சாரங்கன்