ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்
Friday, January 8, 2016
இருண்டகதைள்
அன்புடன் ஆசிரியருக்கு
வழக்கம் போல் இன்றும்
வெய்யோன் வாசிப்புடனே தொடங்கியது. ஹேகய குலத்திற்கும் பார்கவ
குலத்திற்குமான பழி வளரும் தருணங்களே இதுவரை வெண்முரசினுள் மிக
நெருடலான ரீசனிங் தோற்கக் கூடிய பகுதியாக எனக்கு இருந்து வந்தது.
ஆனால் தீர்க்கதமஸின் அத்தியாயங்கள் அந்நெருடலை துளியாக்கி விட்டன
எனலாம். கலங்கிய மனநிலை என்பதை என்னால் ஏதோவொரு விதத்தில் புரிந்து
கொள்ள முடிகிறது.