Thursday, September 8, 2016

கலசத்தில் தொடங்கி




ஜெ

வெண்முரசின் சொல்வளர்காட்டின் வளர்ச்சியில் ஒரு ஒழுங்கு தெரிகிறது. அது அடிப்படையான தத்துவமுரண்பாட்டின் நுட்பத்தில் தொடங்கியது. சொல்லா பொருளா என்று. அங்கிருந்து விரிந்துகொண்டே வந்தது. பிருகதாரண்யகத்தில் அத்தனை மானுட ஞானத்தையும் வேதமாக்கியது. அடுத்து சாந்தீபனியில் சமன்வயம். அடுத்து இப்போது யதார்த்தம். கிருஷ்ணன் சொல்வதுபோல வேசிபோல எல்லா ஞானத்தையும் இணைப்பது. நேரடியாக சமைலறை. பலபட்டறை என்று எங்களூரில் சொல்வோம்

ஒரு கோபுரத்தின் கலசத்தில் தொடங்கி படிப்படியாக கீழே இறங்கி வருவதுபோல தத்துவத்தின் உச்சியிலிருந்து நடைமுறை உண்மை நோக்கிச் செல்கிறது வெண்முரசு

மனோகரன்