இன்றைய பகுதியில் பெண் ஒருத்தியின் உள்ளத்தின் நேரடி உணர்வுகள் மிகச்சரியாகவும் சிறப்பாகவும் சொல்லபட்டிருக்கிறது. பீமனுக்கு துவக்கதிலிருந்தே அவள் சொல்லப்போவதை கேட்க விருப்பமில்லை. அவன் எதிர்பார்த்தபடியே அவன் விரும்பாததையே சொல்லியும் விடுகிறாள்.
பெரும்பாலும் கணவர்கள் மனைவி வழக்கத்துக்கு மாறாக சொல்லாடத்துவங்கினாலே எச்சரிக்கை அடைந்துவிடுவார்கள் அதையேதான் பீமனும் செய்கிறான். அதிகம் பேச்சின் வழியே நெருங்குவதை பொதுவில் கணவர்கள் விரும்புவதில்லை ஏனெனில் மனம் விட்டு பேசத்தொடங்கும் மனைவிகள் உறுதியய் கணவரைக்காயப்படுத்தும் உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்துவார்கள் என்று அவர்களுக்குத்தெரியும்.
எல்லம் சொல்லிய பின் திரெளபதியின் உடல்மொழியில் தெரியும் விடுதலை அனெகமாய் இப்படி மனம் திறந்து எல்லம் சொல்லியபின்னரோ அழுத பின்னரோ பெண்களுக்கு வரும் விடுதலைதான் என்பதை ஒரு பெண்ணாக என்னாலும் உணரமுடிந்தது
//அவள் சொல்லப்போவதை தான் விரும்பமுடியாதென்று முன்னரே உள்ளம் அறிந்தது எப்படி?//
மிகத்தெளிவாய் கணவன் கண்டுபிடிக்கும் ஒன்ரே ஒன்று இதுமட்டுமே! அசர்ந்தப்பமாய், தெளிவாக, உறுதியாக, அழாமல் மனைவி பேசத்துவங்கினால் கணவர்கள் எச்சரிக்கை மட்டுமல்ல அச்சமும் அடைவார்கள்.உண்மையை சந்திக்க தயங்கும் அச்சம் அது
சமையலும் வீட்டைத்தூய்மை செய்வதும் மீண்டும் மீண்டும் ஒன்றேதான் ஆனால் அவற்றில் ஆழ்ந்த்துதான் பெரும் துயரங்களயும் வஞ்சங்களையும் மறக்க முயற்சிக்கிறோம்.
அந்த விடுதலையின் எல்லையையும் தாண்டவேண்டிய தருணங்களிலேயே வெளியேறுவதைக்குறித்து பெண்களும் சிந்திக்கிறோம் . அங்கும் பிள்ளைகள் தளையாகிறார்கள்.
//ஒரு சொல்விளையாட்டிக்னூடாக அவள் வெளிப்பட இடமளித்துவிட்டோம் என அவன் அறிந்தான்.//
இதைத்தான் ஆரம்பத்திலிருத்தே பீமன் அஞ்சிக்கொண்டிருந்தான்
லோகமாதேவி