Wednesday, February 14, 2018

இரு தெய்வங்கள்



அன்புநிறை ஜெ,

ராமனது காலம் மன்னன் மண் நிகழ்ந்த இறையென போற்றப்பட்ட காலம், அவன் தாள் பற்றும் குறடுகள் மக்கள் மனங்களை ஆண்டன.

பாரதம் நிகழும் காலம் வல்லமைகளின், ஆற்றலின் காலம். வில் ஆள்கிறது. அவனுக்கு அரியணையை உறுதி செய்வதும் அதுதானே. அதுவௌ பொருத்தமானது.

அவனது இருள் சூழ் காலத்தில் ஹரியும் சிவனும் அவனையும் நாட்டையும் நிகழ்த்துகிறார்கள். அவன் தன்னையே அழித்து ஆழம் வரை சென்றாலும் மூழ்கி விடாது கரை சேர்க்க சிவதரும், குடிகளுக்கும் மைந்தர்களுக்கும் பாதுகாப்பென ஹரிதரும் - காவியங்களில் எந்தப் பெயரும் எதேச்சையல்ல என்று மீண்டும் தெரிகிறது.

மிக்க அன்புடன்,
சுபா