அன்புள்ள ஜெ
சஞ்சயன் திருதராஷ்டிரரிடம்
கதை சொல்லும்போது போரைப்பற்றி ஒரு விஷயத்தைச் சொல்கிறான். அது சலிப்பூட்டுவது. ஏனென்றால்
திரும்பத்திரும்ப ஒன்றேதான் அதில் வெளிப்படும். அந்தச்சலிப்பை அடைபவர்கள் அதிலே தோற்பார்கள்.
அந்தச் சலிப்பை அடையாதவர்கள் வெல்வார்கள். இப்போதே போரிலீடுபடுபவர்கள் பெரும்பாலும்
சலிப்படைந்துவிட்டார்கள். அவர்கள் போர் போதுமென்று நினைக்கிறார்கள். ஆகவே செத்துக்கொண்டும்
இருக்கிரார்க்ள். கிருஷ்ணன் சலிப்பதில்லை. ஆகவே அருஜுனனும் சலிப்பதில்லை அபிமன்யூ சின்னப்பையன்.
ஆகவே அவனும் சலிப்படைவதில்லை.
இது ஒரு முக்கியமான
விஷயம் என நினைக்கிறேன். நான் தொழிலில் இதைப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். எந்தத்தொழிலும்
பத்தாண்டுகளில் சலிப்பாகிவிடும். சலிப்பு வரும்போது அதை வேறு எவரிடமாவது ஒப்படைத்துவிடுகிறார்கள்.
அல்லது கவனக்குறைவாகச் செய்கிறார்கள். அல்லது அதீத ரிஸ்க் எடுக்கிரார்கள் அழிவு வருகிறது.
அந்தச்சலிப்பே இல்லாதவர்கள்தான் பெரிய வெற்றியை அடைகிறார்கள். குருசேத்திரம் எல்லா
இடங்களிலும் நடந்துகொண்டேதான் இருக்கிறது
முருகவேல்.