ஜெ
போரில் கொடூரவடிவமான தெய்வங்களையும் போர்க்கோலம்பூண்ட தெய்வங்களையும் பார்க்கையில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. உண்மையில் மனிதனின் ஆதி தரிசனம் தெய்வங்களின் இரக்கமில்லாமையைத்தான். நாம் அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும்போதே அங்கிருக்கும் இரக்கமில்லாத விதிகளையும் அதிகாரிகளையும்தான் காண்கிறோம். அதனுடன் ஒத்துப்போகிறோம். பிறகு அது கருணை கொண்டது நியாயமானது என நம்ப ஆரம்பிக்கிறோம் அதைப்போல மனிதர்கள் காலப்போக்கில் கருணையான தெய்வங்களை உருவாக்கிக்கொண்டார்கள். உண்மையில் இங்கே இருப்பவை இயற்கையின் குரூரமான விதிகள். அவைதான் கொடுந்தெய்வங்களாகத் தெரிகின்றன.சஞ்சயன் கண்டது பக்திமனம் உருவாக்கும் மாயைக்கு அப்பால் உள்ள உண்மையான தரிசனம்
நா. குமார்