Sunday, December 2, 2018

தர்மத்தின் புரிதல்கள்



தர்மத்தின் புரிதல்கள் முரண்படுவதால் பேரழிவு உண்டாக்கும் என்பதே மகாபாரதத்தின் சுருக்கம்.
அவரவர் அளவில் அவரவர் செய்தது சரிதான் என்று நின்றுவிடக்கூடாது என்பதே அதன் தத்துவம்.
தர்மம் எந்த மனிதரோடும் கட்டப்பட்டதல்லதர்மத்துடன் மனிதர்கள் தங்களை பிணைத்துக் கொள்ளவேண்டும் என்பதை இக்காவியம் மிக அழகாக காட்டும்
இக்காவியத்தை கண்ணன் நமக்குச் சொன்னதாக வியாசர் சொன்னதாகச் சொன்னதை தொகுக்கச் சொன்னால் பகவத் கீதையை தாண்டாது பலரின் ஆய்வு.ஆனால் ஜெயமோகன் போன்ற சிலர் அவருடைய ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிய முற்பட்டு ஆழக் குளிப்பவர்கள்அதில் கிடைக்கும் முத்துகள்பலஅவற்றை எளிய கேள்விகள் மூலம் பெரும் வாய்ப்புகள் இருந்தாலும் தங்கள் மனதில் இருக்கும் பிம்பங்கள் உடைவதை விரும்பாத காரணத்தால் மட்டுமேஅவற்றை ஒதுக்குவது யாருக்கு நஷ்டம் என்பது உங்களுக்கே புரியும்.
கண்ணன் பீமனைப் பார்த்து துரியோதனனைப் பார்த்து மல்யுத்ததிற்கு அழை எனச் சொல்லி இருக்கலாம்ஆனால் சொல்லவில்லைதுரியோதனின் பலமானகதையுத்ததிற்கு பீமன் அழைக்கிறான்
துரியோதனின் பலம் கதையுத்தம்அதிலும் அவனின் பலவீனமானத் தொடைகள் வெளிப்படாதது அதில்தான்அதனால்தான் அவன் அந்த யுத்தத்திற்குஉடன்படுகிறான்
ஒவ்வொரு மனிதனுக்கும் தர்மத்தின் மீதான கடமை மற்றும் உரிமை உண்டு
ஒவ்வொரு முறை தர்மத்தின் மீதான கடமையை மீறும்பொழுதும் தர்மத்தின் மீதான உரிமையை இழக்கிறான்
துரியோதனன் தர்மத்தின் மீது தன் உரிமையை இழந்துவிடுகிறான்
பீமனைத் தட்டிக் கேட்கும் உரிமையை அனைவருமே இழந்து நிற்கிறார்கள்பலராமன்கிருபர்த்ருதராஷ்டிரன்காந்தாரிவியாசர்கிருதவர்மன்,அஸ்வத்தாமன் உட்பட யாருக்குமே உரிமையில்லை
பீமனா -- அர்ச்சுனனா --- தர்மமா
தர்மம்தான் மகாபாரத யுத்தத்தின் போக்கையும்அதன் ஒவ்வொரு விளைவுக்கும் காரணமாக அமைகிறது
தர்மத்தின் இந்த ஆளுமையை ஏற்றுக் கொண்டதால் பாண்டவர்கள் உயர்கிறார்கள்
கண்ணன் மட்டுமே இந்த தர்ம சூட்சமத்தை அறிந்தவர்

மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றது பாண்டவர்களோ அல்லது வேறு யாருமோ அல்ல
தர்மம் வென்றதுதர்மம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது
பாண்டவர்கள் எல்லாவற்றையும் அவர்களின் சுயதர்மப்படி செய்து வென்றிருந்தால் தர்மத்தைப் பற்றி யோசிக்காமல் அவர்களின் புகழை மட்டுமே பாடிக்கொண்டிருப்போம்
எது தர்மம் என்ற கேள்வியே பிறந்திருக்காதுதர்மத்தின் சூட்சுமம் புரிந்திருக்காதுதெளிவுகள் கிடைக்காது

அதனால்... 
அனைத்து வீரம் பலம் சாகசம் இவை எல்லாவற்றையும் விட  தர்மமே உயர்ந்தது என அறிவோமாகஎன்னுடைய தர்மம் எனப் பார்க்காமல் பொதுதர்மத்தைஅறிந்து செய்வோமாகஅதர்மங்கள் தங்கள் வலையில்  நம்மை வீழ்த்தாமல் பார்த்துக் கொள்வோமாக.



பாரதப் போரில் மூன்று முக்கியமானவர்கள் 

1. 
பீஷ்மர் - பரசுராமரின் சீடர் 
2. 
துரோணர் - பரசுராமரிர் அனைத்து அஸ்திரங்களையும் தானமாகப் பெற்றவர் 
3. 
கர்ணன் - பரசுராமரின் சீடர்.
இவர்கள் மூவரையும் நம்பியே போரில் இறங்கினான் துரியோதனன்.  இதனால் துவாபர யுகத்திலும்திரேதா யுகத்தைப் போன்றே பரசுராமரால் மிகப்பெரியஷத்ரியப் பேரழிவு நிகழ்ந்ததுஇவர்கள் மூவரும் இல்லாமலிருந்தால் போரில் இறங்க துரியோதனன் முடிவு செய்திருக்க மாட்டான்பாண்டவர் பக்கமிருந்துபல மாவீரர்களின் வதமும் நடந்திருக்காது

அதாவது இம்மூவரையும் பரசுராமர் தனது முக்கால அறிவால் தேர்ந்தெடுத்தே தமது வித்தையைக் கொடுத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.  அவரதுவித்தை ஷத்ரிய அழிவுக்கே இங்கும் பயன்பட்டது என்பதே சூட்சமம் ஆகும்