ஜெ
துரோணர் மாறிக்கொண்டிருப்பதைப் பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அவ்வாறு மாறிக்கொண்டே இருப்பது மானுட இயல்பு. ஆனால் கடைஇயாக எங்கே எப்படி நிலைகொள்கிறார் என்பதே அவரை தெய்வமாக்குகிறது. நீத்தார் தெய்வமாக அவாது அப்படித்தான். அவ்வாறு துரோணர் நிலைகொள்வது ஓர் ஆசிரியராக. அவர் அர்ஜுனனை ஆசீர்வதிக்கிறார். கற்ற அனைத்தையும் அவன் திருப்பி அளித்தான். அவர் எல்லாவற்றையும் திருப்பிக்கொடுக்கிறார். அதேபோல ஆண்மையுடன் நின்ற பீமனை அவர் வாழ்த்துகிறார். திருஷ்டதுய்ம்னன் அவரை அவமானப்படுத்தியிருந்தாலும் எந்த வருத்தமும் இல்லை. அவர்தான் மாபெரும் ஆசிரியர். அவர் சாராம்சத்தில் ஆசிரியர்தான். பிற எல்லாம் அவர்மேல் வந்து படிந்து மீண்டும் அகன்று செல்பவைதான்
ராஜசேகர்