ஜெ
வெண்முரசின் பாரததரிசனம்
பற்றிய கடிதங்களை வாசித்தேன். எனக்கும் ஆழமான மனப்பதிவுகள் உள்ளன. நான் ஓய்வுபெற்றபின்
நீண்டபயணம் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். விருப்ப ஓய்வுகொடுத்ததுமே பயணம்செய்ய
ஆரம்பித்தேன். அப்போதுதான் வெண்முரசு இந்த இடங்களை எல்லாம் எப்படி நம் மனதிலே பதியச்செய்கிறது
என்ற எண்ணம் வந்தது. விதர்ப்ப மாநிலத்துக்குப் போனேன். அங்கிருக்கும் பொடிமண்ணும் பாறைகளும்
எனக்கு பெரிய கனவுபோல இருந்தன. எதிபொத்லா, தூத்மா அருவியெல்லாம் வெண்முரசிலே வந்திருக்கிறது.
வடக்கே கோமுகம் லடாக் எல்லாம் வந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவே வந்திருக்கிறது.
இந்தியா என்றாலே வெண்முரசின் சித்திரம்தான். வெண்முரசு உருவாக்குவது இன்றைய அரசியல்
இந்தியா அல்ல. அன்றைய தார்மிக இந்தியாவை
கணேஷ்குமார்