ஜெ
பாஞ்சாலி தன் கணவர்களையும் காதலர்களையும் காணும் இந்த அத்தியாயங்களை ஒரு த்னியான குறுநாவலாகவே வாசிக்கலாம். அந்த அளவுக்கு வடிவ ஒருமையுடன் அவை உள்ளன. அவள் கர்ணனைக் காண்பதில் இருந்து கிருஷ்ணனை காணாமல் செல்வது வரை. அழகான குறுநாவல். பெண்மனசு என்றால் என்ன என்று சொல்லக்கூடிய ஒரு மிஸ்டிக் நெரேஷன்.
பல நுட்பங்களை தேடித்தேடி பார்க்கமுடிகிறது. அதெல்லாம் நினைத்து எழுதுவதில்லை என்பதனால் உங்களுக்க்கே நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டியிருக்கும். பாஞ்சாலி எல்லாரையும் பார்க்கிறாள். ஆனால் கண்ணனை அவள் முழுமையாகப் பார்க்கவில்லை. அவன் அவளைப் பார்க்கவில்லை. அல்லது அவன் மயில்பீலிதான் பார்க்கிறது
அவளுக்கு ஒவ்வொருவரும் யார் யார் என்று அர்த்தம் வருகிறது. அர்ஜுனன் அவளை உடலாக பார்ப்பவன். பீமன் அவள் உடலாக பார்ப்பவன். தருமன் அவள் அறிவை அறிபவன். கர்ணன் அவள் காதலை அறிபவன். இவர்களெல்லம் சேர்ந்த கிருஷ்னன் அவளை அறிபவ்ன்
ஒவ்வொரு வரியும் நுட்பமாக வாசிக்கவேண்டியது. பலவரிகளில் நடுவே மனசு ஓடின தடம் தெரிகிறது. சில இடங்களில் வாசிப்பே நின்றுவிடும்படி இருக்கிற்து. பிரயாகை முதல் அத்தியாயம் முதலே மனசைச் சொல்லும் படைப்பு. அதன் உச்சம் இந்த நாலைந்து இடங்கள்தான்.
ரகுராம்