Friday, January 2, 2015

இருள் வடிவினள்



ஜெ

பிரயாகையின் 75 ஆவது அத்தியாயம் ஒரு பெரிய அனுபவம். அதைப்பற்றி நீங்கள் எழுதியிருந்ததையும் வாசித்தேன். http://www.jeyamohan.in/66339 உக்கிரமான அனுபவங்கள் நம்மை சமநிலை குலைய வைக்கின்றன. பிறழ்வுகளை நாம் வாசிப்பது நம் மனசில் உள்ள புதிய போக்குகளை அல்லது ஆழமான போக்குகளை புரிந்துகொள்வதற்காகத்தான். அந்த அத்தியாயம் இந்த அளவுக்கு உக்கிரமாக இருப்பதற்குக்காரணம் அது காட்சிரீதியாக இருப்பதுதான். உணர்ச்சிகள் சொல்லப்படவில்லை. தூரத்தில் விலகி நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதோடு அந்தப்பார்வையே ஒரு நரியின் கோணத்திலே அமைந்திருக்கிறது. நரி பார்க்கிறது. ரத்தருசி கொண்ட நரியின்பார்வை இருப்பதனால்தான் அந்தக்கொலையை நாம் எங்கேயே மன ஆழத்திலே கொஞ்சமக ரசிக்க ஆரம்பித்துவிடுகிறோம் என்று தோன்றுகிறது.

காளியை கருவறைக்குள் வரைந்துவைத்து வழிபடுவார்கள். அதை நீங்கள் எங்கேயோ எழுதித்தான் வாசித்திரிருக்கிறேன். பாவை என்றால் வரைந்த விக்ரகம். ஆனால் அந்தக்காளியை விட பயங்கரம் அந்த மனிதன் கழுத்தை அறுத்துக்கொள்வது. அந்த உடுக்கோசையிலே வெளிப்படும் காளி. அதுதான் பயங்கரம்.  தலையை எடுத்துவைத்து வாயில் பந்தம் வைப்பதைத்தான் இப்போது இளநீரை வெட்டி வைத்துச்செய்கிறார்கள். ரத்தம்தான் ஆரத்தியாக ஆகியிருக்கிறது

அந்த காட்சியை காணும்போது நம் மனசில் ஏதோ ஒன்று நிகழ்கிறது. பெரிய தியான அனுபவம அது

சாரங்கன்