அன்புள்ள ஜெ,
பொன்னியின் செல்வனிற்கு அடுத்து வாசிப்பிற்கு தங்களுடைய முதற்கனலில் தான் தொடங்கினேன். இப்போது மழைப்பாடலில் இருக்கிறேன் சில சந்தேகங்களோடு. துர்வசு மற்றும் யது ஆகியோர் யயாதியால் கைவிடப்பட்டவர்களாயினும், சந்திரகுலத் தோன்றல்களே. ஆனால் அவர்களால் உருவாக்கப்பட்ட காந்தார மற்றும் யாதவ குலங்கள் ஷத்ரிய குலங்கள் இல்லை என்பது எனக்கு புரியவில்லை. தெளிவு கொள்ள விழைகிறேன்.
இப்படிக்கு
அரசன்
அரசன்
அன்புள்ள அரசன்
மகாபாரதம் எழுதப்பட்டு நெடுங்காலம் பல மரபினரால் சொல்லப்பட்டு வந்தது. ஆகவே பலவாறாக அது விளக்கப்பட்டு, இடைவெளிகள் அடைக்கப்பட்டு, மழுப்பப்பட்டு வந்திருக்கிறது. வெண்முரசு அவற்றை களைந்து உண்மையில் அங்கிருந்த சிக்கல்களை நோக்கிச் செல்கிறது
மகாபாரதபோர் முடிந்தபின் பாரதவர்ஷமே யாதவக்குடிகளிடம் வந்தது. அவர்கள் நெடுங்காலம் ஆட்சி செய்தனர். மகாபாரதப்பிரதி நெடுங்காலம் பிருகுபிராமணர்களால் நாடெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. வியாசரின் சீடமரபினரால் அது தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆகவே யாதவர்களை ஷத்ரியர்கள், சூரிய வம்சத்தவார் என விளக்கும் கதைகள் உள்ளே சேர்க்கப்பட்டன. மிதமிஞ்சி கிருஷ்ணனின் பெருமையைப்பேசும் இடங்கள் , அவனை தெய்வமாகவே முன்வைக்கும் இடங்கள் சேர்க்கப்பட்டன. பரசுராமரின் கதைகளும் வியாசரின் கதைகளும் அவரவர் தரப்புகளால் சேர்க்கப்பட்டன. வெண்முரசு அவற்றை அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை

ஒரே ஒரு குறிப்பு. .சபாபர்வம் 36 ஆம் அத்தியாயத்தில் சிசுபாலன் தெளிவாகவே சொல்கிறான்.. விருஷ்ணிகுலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கு அரசனுக்குரிய மரியாதைகள் அளிக்கப்படலாகாது என்று. அவன் ஒரு நாட்டுக்கு அதிபன் என்றாலும் தாசனுக்குரிய குலத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு புகழ்மிக்க ஷத்ரியர்கள் எப்படி மரியாதை செய்து அவையில் அமரவைக்கலாம் என்று கேட்கிறான்.
பின்னா அப்பகுதி பலவாறாக முற்பிறவிக்கதையெல்லாம் சேர்த்து மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. சிசுபாலனே யாதவன் தான் என்று விளக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னரே அது மகாபாரதத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அது அங்கே தெளிவாகவே இருந்துகொண்டிருக்கிறது. அது கிருஷ்ணனின் விருஷ்ணிகுலம் ஷத்ரியர்களாக கருதப்படவில்லை என்பதற்கான ஆதாரம்.

யாதவர் யயாதியின் வம்சத்தவர், எனவே ஷத்ரியர் என்பதற்கு எதிரான கூற்று இது. அதேசமயம் கௌரவர்களும் இதேபோல கதை கொண்டவர்கள். அவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. குருவம்சத்தவனான நீ எப்படி விருஷ்ணி குலத்தை அரசனாக ஏற்கலாம் என்றுதான் சிசுபாலன் கேட்கிறான்.
இச்சிக்கலை இப்படி நான் விளங்கிக்கொள்கிறேன். அன்று தந்தைவழி மரபு கொண்ட சமூகங்களில் ஆணின் வாரிசாகவே குழந்தைகள் கருதப்பட்டனர். ஆகவே அரசன் எக்குலத்தில் மணம் புரிந்தாலும் குலம் மாறுவதில்லை. சந்தனுவின் பிள்ளைகள் மச்சர்குலத்தவர் அல்ல குருகுலத்தவரே. ஆனால் யாதவர்கள் பெண்வழி உரிமை கொண்டவர்களாக இருக்கலாம். ஆகவேதான் குந்தியை குந்திபோஜன் தத்தெடுக்கிறான். அங்கே வாரிசுரிமை பெண் வழியாகவே செல்கிறது. ஆகவே விருஷ்ணிகள் ஷத்ரியர்களாக கருதப்படவில்லை. போருக்குப்பின்னர் அவர்கள் அப்படி ஒரு ஷத்ரிய அடையாளத்தை, ஆண்வழி மரபை உருவாக்கிக்கொண்டிருக்கலாம்
ஜெ