Saturday, January 3, 2015

வலியின் பேரின்பம்




கர்ணன் தாங்கும் வண்டு துளைப்பின் வலியின் நொடிகள் ஆண்டுக்கணக்கான நீட்சியாக உள்ளது. இது relativity theory யின் “கால நீட்சி”  (time dilation) போல உள்ளது. அதீத உணர்வொன்று எல்லை கடக்கும்போது காலம் நின்று விடுகிறதோ?

வண்டு தன் சிறகுகளால் குடைந்துகொண்டு தசைக்கதுப்புக்குள் மெல்லப்புரண்டபோது என் வாழ்நாளில் அதுவரை அறியாத உடலின்பம் ஒன்றை அடைந்தேன்.

இதுதான் துணுக்குறச் செய்யும் இடம்.
வலி என்ற உணர்வு அரிப்பு, எரிச்சல், நமைச்சல் போன்று தொடுபுலனுடன் தொடர்புடைய ஒரு புலனுணர்வு. புலன்களிலிருந்து நரம்புகள் மூளைக்கு தகவல்களை சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் பரிமாற்றம் மூலம் ஏற்படும் மின்னணு செய்திகளாக கொண்டு செல்கின்றன (Sodium and Chloride ion exchange). மூளை பெரும்பாலும் நீர்மக்கோழையால் ஆன காலிபிளவர் போன்ற பந்து. இதில் ஒவ்வொரு புலன் சிக்னல்களையும் பெற்று, process  செய்ய தனிப்பகுதிகள் (lobes) உள்ளன. நவீன அறிவியல் இதுவரை மூளை ஆய்வில் ஒரு குழந்தையாகவே உள்ளது.  அனைத்து புலன்களையும் அவற்றின் வலிகளையும் அறியும் மூளை, தன் வலியை அறிவதில்லை. மூளையில் வெட்டினால் வலி வராது. வலி என்பது ஒரு அடிப்படை உடல் பிரச்சினையை அறிவிக்கும் சிக்னல் தான். Terminal cancer  நோயாளிகளுக்கு வலியை உணரும் மூளைப்பகுதியை “தூங்கவைக்க ‘  palliative medicine  வழங்கப்படுகிறது.
இனி கர்ணனின் ‘இன்பம்’.  வலியை உணரும் மூளைப்பகுதியின் அருகில் தான் ‘இன்பத்தை’ உணரும் பகுதியும் இருக்கிறதா என்று யாரேனும் neuroscientist விளக்குவரோ? எந்த ஒரு அளவையிலும் இரு முனைகள் ஒன்று போலவே இருக்கும். வலியும் இன்பமும் போல. நான் கல்லூரியில் வேதியியல் படிக்கையில் “medical oxygen “ ஐ காற்றில் இருந்து பிரித்து திரவமாக்கி உருளையில் அடைக்கும் தொழிற்சாலைக்கு கல்விச் சுற்றுலா சென்றோம். ஆக்சிஜனை பெரிய குளிர்விக்கும் தொட்டியில் இருந்து பிடித்து ஒரு தம்ளரில் காண்பித்தார் தொழிலாளி. பச்சை நிறத்தில் புஸு புஸு வென்று புகை விட்டுக்கொண்டிருந்த்து திரவ ஆக்ஸிஜன்.  அதிக சூடும் அதிக குளிரும் ஒருபோலவே; அதிக வலியும் அதிக இன்பமும் போல.
வலியும் இன்பமும் ஒன்றன் இரு முகங்களா?
என்று முடிகிறது இந்தப்பகுதி

ராகவேந்திரன்