Saturday, January 3, 2015

பல நிலங்களில் வாழ்வது



ஜெ சார்

ஓராண்டுக்காலமாக வெண்முரசை ஓரிரு நாட்கள் தவிர தினமும் வாசித்து வருகிறேன். செல்போன் இல்லாவிட்டால் வாசித்திருக்க முடியாது. காலையில் எழுந்ததுமே ஒருமுறை வாசிப்பேன். அதன்பிறகு பயணத்திலும் வாசிப்பேன்

வெண்முரசின் பல தளங்களைப்பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். இவ்வளவு கடிதங்கள் வந்து குவிந்துகொண்டே இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கடிதங்களிலே சொல்லப்படாத ஏதும் இல்லை. அதிலும் ஒருநாளில் கடலூர் சீனுவின் நான்கு கடிதங்கள் வந்திருந்தன

ஆனால் எனக்கு வெண்முரசு அளிக்கும் அனுபவம் என்பது வெவ்வேறு மண் வழியாக பயணம் செய்வதுதான். ஒரே பாதையில் ஒரே வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனால் கற்பனையில் புதிய புதிய நிலங்களுக்குப் போய்க்கொண்டே இருக்கிறேன். புதிசு புதிசாக வாழ்கிறேன்

பாலைவனம் பழைய கோட்டைகள் புல்வெளிகள் நதிகள் என்று என்னென்னமோ. கனவு மாதிரி இருக்கிறது. அந்தக் காட்சிகளை கண்ணெதிரே பார்ப்பேன். அங்கெல்லாம் சென்று வருவேன்

இந்த விரிவான வாழ்க்கையை அளித்ததற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் சார்

ஆர்.சிந்தாமணி