இனிய ஜெயம்,
திரௌபதி குறித்த முதல் அறிமுகமே குன்றாத காமமும்,பெரும் தாய்மையும் கொண்டவள் என்றே துவங்குகிறது. திரௌபதி அதை நோக்கி நகரத் துவங்கி விட்டாள். என்ன என்று சொல்லத் தெரியவில்லை இப்போது திரௌபதி மேல் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.
தர்மன் கொஞ்சம் கொஞ்சமாக தனது கீர்த்தியில் தேர்ச்சி அடைவதை அறிய முடிகிறது. நீதி நூல்களுக்கும், அரசனின் நீதி வழங்களுக்குமான உறவை தர்மன் திட்டவட்டப் படுத்துவது அழகு. அன்பால் மழுங்கிய நீதி. என்ன ஒரு சொல்லாட்சி. [ஈரோடு கிருஷ்ணன் என்ன சொல்லப் போகிறார் என்று இப்போதே மனம் முந்துகிறது]
முன்பெல்லாம் அன்னையர் பல கணவர்களைக் கொள்ளும் வழக்கம் இருந்தது என்று அன்னை சொன்னதும், திரௌபதி கன்னம் ஊதிக் குவித்து புருவங்களால் மாயை வசம் பேசுவது, பாவம் தர்மர் இதயெல்லாம் எப்படி தாக்குப் பிடிக்கப் போகிறாரோ தெரியவில்லை.)))
கடலூர் சீனு