Thursday, March 5, 2015

ஐவள்

ஜெ

வெண்முரசில் பாஞ்சாலியை ஒரு தெய்வ உருவமாக நீங்கள் காட்டுவது வரை அப்படி ஒரு கோணத்தில் யோசித்ததே இல்லை. அதன்பின்னர் பார்க்கும்போது தெய்வச்சிலையாக மட்டுமே காணமுடிகிறது. ஐந்துமுகம் கொண்ட அன்னை. ஐந்து கணவர்கள். ஐந்து என்ற எண்ணே வந்துகொண்டிருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது இதை எப்படி விட்முடிந்தது என்று

ஒரேசமயம் உலகியல்தளத்திலும் தாந்த்ரீகத்தளத்திலும் பாஞ்சாலியை நிலைநிறுத்தியதுதான் நீங்கள் செய்த சாதனை. பாஞ்சாலி ஐவரை மணந்ததைப்பற்றிய மிகச்சிறந்த விளக்கம் என்பது அவள் ஒரு deity என்பதாகவே இருக்கமுடியும். மற்றபடி முற்பிறப்பின் சாபம் என்பதெல்லாம் பிற்காலக்கதைகள்

பாஞ்சாலிக்கும் கண்ணனுக்குமான உறவை எப்படி அமைக்கப்போகிறீர்கள் என்பதைத்தான் காத்திருந்து வாசிக்கிறேன்

மனோ.