ஜெ,
துச்சளையின் கதாபாத்திரம் அழகாக உருவாகிவந்துவிட்டது. வழக்கமான மகாபாரதக்கதைகளில் அவளுக்கு பெரிய இடமே இல்லை. ஒரு பெயர் மட்டும்தான். ஆனால் அவள் முக்கியமான கதாபாத்திரம் நூற்றைந்துபேருக்கு ஒரே தங்கை. அந்த நுட்பமான விஷயம் இதுவரை பேசப்படவேஇல்லை என்பதை நீங்கள் அதைப்பேசியதும்தான் எனக்கே தோன்றியது. ஆச்சரியம்தான்
துச்சளைக்கு சமானமான இன்னொரு பெண் இருக்கமுடியாது. அவளுடைய கதாபாத்திரத்தை எப்படி கொண்டுசெல்லலாம் என்பதே உங்கள் கைகளில்தான் உள்ளது. ஏனென்றால் அவளுக்கு என்று ஒன்றுமே கொடுக்கவில்லை வியாசர்.
அவளுடைய தோற்றத்தை நீங்கள் வர்ணித்திருக்கும் விதம் அழகானது. ஜெ எல்லா பெண்களையும் அழகிகளாகக் காணும் கண் இருக்கிறது உங்களுக்கு. உங்களைப்பார்த்தால் பெண்களை இந்த அளவுக்கு ரசிப்பவர் என்று சொல்லவே முடியாது.
சாரங்கன்