இன்றைய இலக்கியப்போக்கிற்குரிய அழகும் வடிவமும் கொண்டுள்ளது வெண்முரசு. நமது வழக்கில் இருக்கின்ற எளிமையான (பேச்சு வழக்கிலுள்ள தமிழ்) நடையில் இருந்து விலகி தற்காலத்தில் சற்று அன்னியமாக தெரிகின்ற இலக்கியத்தமிழ் நடையில் இயற்றப்பட்டிருந்தாலும் ஒன்றிரண்டு பாகங்களைக் கடந்தபின்னால், நடையின் வீரியம் நம்மை ஊடுருவி பிணைந்து விடுகிறது. நமது பண்டைக்கால வரலாறு என்பதையும் கடந்து தத்துவச்செறிவும் மெய்ஞானச்செறிவும் வெண்முரசில் முதன்மை பெறுவதைக் கண்கூடாக உணரலாம்.
ரவீந்திரனின் விமர்சனம்