Tuesday, June 6, 2017

மையப்பொருள்



நேற்றைய பகுதியில் வந்த கீழ்க்கண்ட வரிகள் நுணுகி ஆராயத்தக்கன. ஒத்திசைவின் மையப்பொருள் பொருள் கொண்டதாக இருப்பதைவிட மெய்ப்பொருளை சுட்டி நிற்பதும். தோற்றமயக்கங்கள் முயங்கிக் கூடி தோற்றங்களின் மெய்ப்பொருள் கோலத்தைக் காட்டுவதும். மெய்ஞானத்தின் பொருளும் விஞ்ஞானத்தின் வழியும் நிகர் நின்று ஆடும் கோலமும் அர்த்தம் தந்த வரிகள்:-

"பல்லாயிரம் பொருளின்மைகள் கூடி உருவாகும் ஒத்திசைவு. அந்த ஒத்திசைவினூடாக தெரியவரும் மையப்பொருள். அது வெறும் தோற்றமே எனக்காட்டும் ஆழ்பொருள். அது ஒரு துளிமட்டுமே என விரியும் மெய்ப்பொருள். அது வெறும் வியப்பு, வேறொன்றுமல்ல”"

 
கிரிதரன் ராஜகோபாலன்