அன்புள்ள ஜெமோ
மகாபாரத கதை மாந்தர்கள் அனைவரையும் , அணுக்கமாகவும் , அனுகுந்தோறும் நுணுக்கமாகவும் ,நுண்மையாகவும் நுகந்தறியும் வாய்ப்புகளையும் , சந்தர்ப்பங்களும் வந்துகொண்டே உள்ளன. இன்று அஸ்வத்தாமனின் உள்ளக் கிடங்கையும் , அவனின் நுண்ணறிதலையும் அறியும் பொழுது ஏ .....யப்பா எவ்வளவு அழகான ஆன்மாக்களை (உங்களால் ) அறியவைத்துள்ளீர்கள் .
வாழ்நாளில் நாம் அதிகம் அறிந்திராத , அறிய விரும்பும் அழகிய ஆன்மாக்களுடன் மகாபாரதம் வழியே பயணிப்பது பெரும் பேறே .
உங்களின் எழுத்துக்களினுடே அதை நிகழ்த்திக் கொண்டுள்ளோம் .
ஒவ்வொருவரையும் நுணுகி அறியுந்தோறும் நெஞ்சம் விம்ம கண்ணீரை சுண்டியபடியே படிக்க வேண்டியுள்ளது .
நன்றி ஜெமோ உங்களின் எழுத்தின் வாயிலாக நாங்களும் எங்களின் இருப்பை உணர்ந்து கொண்டுள்ளோம்.
வாழ்க வளமுடன்
ஹேமா ரவி கோவஒ