பெரிய எதிரிகளை ஈட்டிக்கொள்வது பெரியவர்களாக ஆவதற்கான குறுக்குவழிகளில் ஒன்று சட்டென்று புன்னகைக்க வைத்த வரி,. உண்மைதான், ருக்மி இன்றும் அறியப்படுவது அவனுக்கு கிருஷ்ணனுடன் இருந்த பகைமையால்தான். அவ்வளவு எளிமையான பகைவனை கிருஷ்ணன் கொல்லப்போவதுமில்லை. ஆகவே அவனுக்கு வாழ்க்கையில் குறைவுமில்லை. வாய்ப்புகிடைக்காத வீரன் என்ற கதாபாத்திரத்தை வாழ்க்கை முழுக்க நடிக்கலாம்.
ஆனால் என்ன பிரச்சினை என்றால் அந்தக்கதாபாத்திரம் ஒரு நடிப்பே என அனைவருக்குமே தெரியும் என்பதுதான். ஆகவே எத்தனை சீரியஸாக நடித்தாலும் அது கேலிக்கூத்தாக ஆகிக்கொண்டேதான் இருக்கும். ருக்மியின் பிரச்சினை அதுதான். ஆகவேதான் அவன் தன் தம்பியரே அதைக் குத்திக்காட்டி அவையிலேயே சிரிக்கும் நிலைவரைக்கும் சென்றுவிடுகிறான்
ராஜ்